உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி நிர்வாகத்தின் வளர்ச்சி : சீன நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியீடு

மோடி நிர்வாகத்தின் வளர்ச்சி : சீன நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீய்ஜிங்: பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்திய பொருளாதாரம், வெளியுறவு கொள்கை ஆகிய துறைகள் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக சீன பத்திரிகை பாராட்டி கட்டுரை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக சீனாவிலிருந்து வெளி வரும் ‛‛குளோபல் டைம்ஸ்'' நாளிதழில் , புடான் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜாங் ஜியாடோங், இந்தியாவை பற்றி நான் என்ன உணர்கிறேன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் முன்னேற்றம் , சர்வதேச உறவுகள், மற்றும் வெளியுறவு கொள்கை, குறிப்பாக சீனாவுடனான அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது. உதாரணமாக, இந்தியா -சீனா இடையே வர்த்தக ஏற்றத்தாழ்வு விஷயத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சீனா கவனம் செலுத்தி இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஜன 05, 2024 10:27

பாவம் ஊபீஸ் இந்த செய்தியும் வயிற்று போராகை அதிகரிக்க செய்யும்


M Ramachandran
ஜன 05, 2024 10:21

ராவுளுக்கும் சுடாலினுக்கும் எரிச்சல் ஊட்டும் செய்தி


R S BALA
ஜன 05, 2024 08:21

இவர்களது பெட்டி செய்தி பாராட்டெல்லாம் நம்பக்கூடாது அது நமக்கு தேவையுமில்லை..


Ramesh Sargam
ஜன 05, 2024 01:11

இப்பொழுதுள்ள சீன அதிபருக்கு இந்தியாவை பற்றி புகழ்ந்தால் பிடிக்காது. எப்படி அவர் இந்த கட்டுரை வெளியிட்ட அந்த பத்திரிகை நிறுவனத்தை மற்றும் இந்த கட்டுரையின் ஆசிரியரை சும்மா விட்டார் எதுவும் செய்யாமல்? ஆச்சர்யமாக இருக்கிறது.


ராஜ்குமார்
ஜன 04, 2024 21:51

சீனா ஓரு குள்ள நரி. இது புயலுக்கு முன்னால் அமைதி போல. இந்தியாவின் பிரதமர் திரு மோடியை புகழ்வது போல புகழ்ந்து காலை வாரி விட சதி நடக்கிறது போலும். எலக்ஷன் எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்போழுதெல்லாம் பிரச்சனை கிளப்பி விடுவார்கள்


T.Senthilsigamani
ஜன 04, 2024 21:49

சபாஷ் நல்ல செய்தி .ஆனால் கொடுமை என்னவென்றால் வெகுஜன சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழும் பொழுதில் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடிஜி ஆட்சியில் ஒரு முன்னேற்றமும் இல்லை இல்லை என நீட்டி முழக்குகிறார்கள்.திமுக போடும் தொகுதி பிச்சைக்காக யாசகம் ஏந்தி நிற்கும் உண்டியல் கட்சியினரின் மனசாட்சியை இந்த செய்தி உலுக்கட்டும் .சீன ஊடகங்களே பாராட்டும் மோடிஜியை , திமுகவிடம் கட்சியை /கொள்கையை அடகு வைத்த கம்யூனிஸ்ட்கள் குறைசொல்லுவது பிறழ்முரண்


Barakat Ali
ஜன 04, 2024 20:45

திமுகவின் எஜமானார்களே பாராட்டிவிட்டார்கள் .........


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை