உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டைமண்ட் லீக் பைனல்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் பைனல்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

சூரிச்: டைமண்ட் லீக் பைனலில், ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து முதலிடத்தை தட்டி சென்றார்.டைமண்ட் லீக் போட்டிக்கான பைனல் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, களம் கண்டார். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், தனது முதல் முயற்சியில் 91.37 மீ., எறிந்தும், 2வது முயற்சியில் 91.51 மீ., எறிந்தும் முன்னிலை பெற்றார். நீரஜ் தனது முதல் முயற்சியில், 84.35 மீ., தூரம் எறிந்தார். தொடர்ந்து தனது 2வது முயற்சியில், 82மீ., எறிந்தார்.ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், 84.95 மீ., எறிந்ததால், நீரஜ் 3வது இடத்திற்கு பின் தங்கினார். தொடர்ந்து தனது அடுத்த 3 முயற்சிகளிலும், பவுல் செய்த நீரஜ், கடைசி முயற்சியில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.

ரிசல்ட்:

1. ஜூலியன் வெப்பர் (90.51 மீ.,) - ஜெர்மனி2. நீரஜ் சோப்ரா (85.01 மீ.,) - இந்தியா3. கெஷோர் வால்கட் (84.95 மீ.,) - ட்ரினிடாட் & டொபாகோ4. ஆண்டர்சன் பீட்டர்ஸ் (82.06 மீ.) - கிரெனடா5. ஜூலியஸ் யேகோ (82.01 மீ.,) - கென்யா6. ஆன்ட்ரியன் மார்டேர் (81.81 மீ.,) - மால்டோவா7. சைமன் வீலேண்ட் (81.29 மீ.,) - சுவிட்சர்லாந்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ