உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் பன்றி நுரையீரலை மனிதருக்கு பொருத்தி சாதனை

சீனாவில் பன்றி நுரையீரலை மனிதருக்கு பொருத்தி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங் : சீனாவில் மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி அதன் இயக்கத்தை அந்நாட்டு மருத்துவர் குழு ஆய்வு செய்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் குவாங்ஜோவில் உள்ள மருத்துவப் பல்கலை மருத்துவமனையில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜியான்ஷிங் ஹே தலைமையில் இந்த சோதனை முறையிலான அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக சீனாவின் பாமா சியாங் பன்றியின் நுரையீரல் பயன்படுத்தப்பட்டது. இது அளவில் மனித நுரையீரல் அளவைக் கொண்டிருந்தது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்றவாறு பன்றியின் நுரையீரலில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன.அதன் பின் அந்த நுரையீரல் 39 வயது மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தப்பட்டது. மூளை சாவு என்பது மூளையை தவிர பிற உடல் உள்ளுறுப்புகள் இயங்கும். எனவே பன்றியின் நுரையீரல் சோதனை அடிப்படையில் அவருக்கு பொருத்தி, சுவாச குழாய் மற்றும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டது. இது 9 நாட்கள் இயங்கியது.ஆரம்பத்தில் பிராண வாயுக்களை பரிமாற்றி ரத்த ஆக்சிஜன் அளவை உடலில் சகஜமாக வைத்திருந்தது. 24 மணி நேரத்துக்கு பின் நுரையீரலில் திரவம் சேர துவங்கியது. மூன்று முதல் ஆறு நாட்களில் நோய் எதிர்ப்பு திசு சேதமடைந்தது. ஒன்பது நாளுடன் சோதனை நிறுத்தப்பட்டது. கிடைத்த தகவல்களை வைத்து மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை சீன மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்காவில், டிம் ஆண்ட்ரூஸ், 67, என்ற நபருக்கு கடந்த மார்ச்சில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவர் ஆறு மாதங்களுக்கு மேல் உயிருடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2025 06:23

உடல் நலனா? அல்லது மதமா ? எது முக்கியம் ?


kumarkv
செப் 21, 2025 22:40

இதை சவுதியில் செய்யவும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 22, 2025 00:20

இவனுக்கு மாட்டு மூளையை ஏற்கனவே மாத்தீட்டாங்க போல


டேனியல்,அடைக்கலபுரம்
செப் 22, 2025 03:54

பொய்கிந்து எதிர்காலத்தில் பன்றி கிட்னியையும் மனித உடம்புல பொருத்த போறானுக அப்ப உன்னோட மூர்க்க கும்பல்கள் அதை உங்க உடம்பில் பொருத்த வேணாம்னு சொல்லி செத்துப் போவீங்களா? ஹ ஹ ஹ் ஹா


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2025 06:24

உங்க கேள்விக்கு பதில் சொல்ல, இதோ உள்ளேன் ஐயா ன்னு சொல்லிக்கிட்டே வண்ட்டானுவளே ?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2025 09:25

நியாயத்தைச் சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை