உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நியூயார்க்: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் புளோரிடா அருகே கடற்கரையில் விழுந்த போது, சுற்றி சுற்றி ஏராளமான டால்பின்கள் வந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். மீண்டும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அந்த நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் உடன், 'டிராகன்' எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு, புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=noywbo85&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் வேகமாகச் சென்று மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தன.இந்த காட்சிகள் நாசா ஒளிபரப்பிய லைவ் வீடியோவில் பதிவாகி இருந்தன. பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களை டால்பின்கள் வரவேற்பதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை நாசா சமூக வலைதளத்தில் பகிர்ந்து திட்டமிடப்படாத வரவேற்பு குழுவினர் என பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SakthiBahrain
மார் 19, 2025 16:45

அவங்க விஞ்ஞானி.. அவங்க விண்வெளியில இருந்து கடவுளைத் தேடுறாங்க, அவங்கதான் கடவுள் இல்லன்னு சொல்றாங்க.. அறிவியல் மட்டும்தான், அவங்களை எப்படி கடவுள் காப்பாற்றுவார்? அவர்களுடைய நெட்டைBold சரியாக முடிகினால் போதும்.. அங்கு க..வுள் வந்து ஒன்னும் கழட்டப்போறதில்லை...


Subramanian
மார் 19, 2025 16:03

வாழ்த்துகள்


Keshavan.J
மார் 19, 2025 11:17

அந்த வின்களம் திமங்கலத்தின் தலை போல் இருக்கிறது. அதனால் தான் டால்பின்கள் அதை சுற்றி வருகிறது


Madras Madra
மார் 19, 2025 10:44

சாதனை இறைவன் கருணை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்


Narayanan
மார் 19, 2025 10:38

வாழ்த்துக்கள் . இறைவன் காப்பற்றுவார்


अप्पावी
மார் 19, 2025 09:30

நல்லவேளை.


முக்கிய வீடியோ