உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்காவுக்கு வரிகள் மற்றும் முதலீடுகள் மூலம் கோடிக்கணக்கான டாலர்கள் வருமானமாக கிடைக்கின்றன,'' என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை வரிகளாகவும் முதலீடுகளாகவும் நாங்கள் பெறுகிறோம். 8 போர்களில் 5 போர்களை நேரடியாக நிறுத்திவிட்டேன்.ஏனெனில் அவர்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் அல்லது இன்னும் சிறப்பாக, அவை தொடங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம். பணவீக்கம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இல்லை. ஜோ பைடனின் கீழ் அமெரிக்க வரலாறு மிக மோசமானது. பங்குச் சந்தை 9 மாதங்களில் 48வது முறையாக உயர்ந்துள்ளது; இதுவரை இல்லாத உச்சத்தில் இருக்கிறது. நாட்டை அழிக்க அனுமதிக்கும் நீதிமன்ற பிரச்னை இனி இல்லை.இது அமெரிக்கா இதுவரை இருந்ததிலேயே மிகவும் பணக்கார, வலிமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். நவம்பர் 5ம் தேதி (தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை குறிப்பிடுகிறார்) மற்றும் வரிகள்தான் அதற்கான காரணங்கள் ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
நவ 23, 2025 20:24

டிரம்ப் ஒரு காமெடியன்.


சிட்டுக்குருவி
நவ 23, 2025 20:17

எதை தின்ன பித்தம் தெளியும் என்று தெளிவில்லாமல் ,இறக்குமதிக்கு வரிபோட்டால் நம் மக்களேதான் கட்டப்போகின்றார்கள் என்றறியாமல் வரியை ஏற்றி மக்களிடம் வசூல் செய்து மக்களுக்கு திருப்பிக்கொடுக்க விரும்புவது எதை காட்டுகின்றது .உலகத்தில் எந்தக்கொம்பனாலும் குறைசொல்லமுடியாத தி.திராவிடம்போல அல்லவா இருக்கின்றது .


சாமானியன்
நவ 23, 2025 19:49

அப்படியே ஆகட்டும். அடுத்த ஆண்டூ டிரம்ப் அவர்கட்கு சிறந்த பொருளாதார மேதை என நோபல் பரிசு கிடைக்கட்டும்.


joe
நவ 23, 2025 19:08

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை புரட்டிப்போடும் .


Palanisamy T
நவ 23, 2025 16:43

கோடிக்கணக்கான டாலர்களென்று தம்பட்டம் அடிக்கலாம. ஆனால் விலைமதிக்கமுடியாத, ஈடுசெய்ய முடியாத நட்பு, நல்லுறவுகளை இழந்துவிட்டீர்கள்.


HoneyBee
நவ 23, 2025 12:33

அடுத்தவன் சொத்தை வரின்னு சொல்லி ஆட்டய போட்டு இப்படி உதார் ன உடும் ஜோக்கர் இவன்


arunachalam
நவ 23, 2025 11:21

பிட்ச்சை எடுத்து, அடுத்தவனை கெடுத்து பணம் சேர்த்தார் என்பதே உண்மை இதில் என்ன பெருமை அடைய வேண்டி இருக்கு. எங்க தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், இதை எத்தனையோ வருடத்துக்கு முன்னரே செய்து வருகின்றனர்


Rajarajan
நவ 23, 2025 11:13

நம்ம ஊரு வைகோவும், இவரும் ஒன்னு. பேச ஆரம்பிச்சா, சம்பந்தா சம்பந்தம் இல்லாம, விடாம பேசிக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேரும், கிருஷ்ணா ராமா கோவிந்தானு ஒரு மூலைல இருந்தா நலம். சரியான குட்டைக்குழப்பிகள்.


HoneyBee
நவ 23, 2025 12:34

பாவங்க நம்ம உலக்கை நாயகன் கோவிசுக்க போறாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை