உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இன்று (அக். 30 ) சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

இன்று (அக். 30 ) சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சீயோல்: தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இன்று சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது.இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30ல்)சந்தித்து பேச உள்ளார்.ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 30, 2025 09:32

சோழியன் குடுமி சும்மா ஆடாது. ட்ரம்ப், சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரிடம் ஏதோ பெருஸ்ஸா எதிர்பார்க்கிறார்.


RAJ
அக் 30, 2025 08:06

காமெடிக்கு நான் கேரண்டீ...


Sun
அக் 30, 2025 07:37

பேச்சு வார்த்தை முடிந்து என்ன சொல்லப் போகிறார்? ஜீ ஜின் பிங் எனது நெருங்கிய நண்பர் ,இனி ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்க மாட்டேன் என என்னிடம் கூறினார் என வழக்கம் போல் கதையை அள்ளி விடுவார் நம்ம பஞ்சாயத்து டிரம்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை