உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ''அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியம்'' என்று சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மாநாடு சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொள்கிறார். பீஜிங் சென்றுள்ள அவர், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; இருநாடுகளின் உறவுகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து இருவரும் மதிப்பீடு செய்தனர். ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இருவரும் சுட்டிக்காட்டினர். பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக அமைதி, ஸ்திரத்தன்மையை பேண, பயங்கரவாதம், எந்த வடிவங்களில் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சந்திப்பின் போது தோவல் வலியுறுத்தினார். பரஸ்பர நலன் சார்ந்த பிற இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sathu
ஜூன் 24, 2025 13:15

திருடன் கிட்டையே போயி எப்படி திருடக்கூடாது என சொன்னால் புரியுமா அவனுக்கு. அவனுக்கு புரியும்படி அடித்து சொல்ல வேண்டும்.


jss
ஜூன் 24, 2025 13:14

சப்பை மூக்கன் பயங்கரவாதத்தை முடிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பயங்கரவீத்த்தை வைத்துதான் சனா உலக அரசியல் செய்யமுடியும். இது ஒருவித்த்தில் இந்தியாவை சீனா நோக்கி நகர வைக்கும் . அப்போது சீனர்கள் தங்கள் வணிக உத்திகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.


Ramesh Sargam
ஜூன் 24, 2025 11:57

முதலில் சீனா, பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் உதவி புரியக்கூடாது என்று கண்டிப்பாக இந்திய அதிகாரிகள் சீன அதிகாரிகளிடம் கூறவேண்டும்.


கண்ணன்
ஜூன் 24, 2025 10:11

சீனர்களுக்கு மந்த புத்தி. ஆகவே சோற்றால் அடித்த பிண்ணங்களாக அங்கே கம்யூக்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் ஒரு கூட்டத்திற்கு அடிமைப் பட்டுக் கிடக்கின்றனர். இன்னும் பல கல்வான்ளை நிகழ்த்திக் காட்டினால்தான புரியும் அவர்களுக்கு


புதிய வீடியோ