உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டைவர்ஸ் இது டைவர்ஸ்; செய்தது ஒன்று; செய்யப்போவது ஒன்று: துபாய் இளவரசிக்கு எல்லாமே ஜாலி!

டைவர்ஸ் இது டைவர்ஸ்; செய்தது ஒன்று; செய்யப்போவது ஒன்று: துபாய் இளவரசிக்கு எல்லாமே ஜாலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: கணவரை டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த துபாய் இளவரசி, 'டைவர்ஸ்' என்ற பெயரில் புதிய வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாமின் மகள் இளவரசி ஷைக்கா மஹ்ரா, 30. பிரிட்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கைக்குழந்தையும் உள்ளது.

விவாகரத்து

சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார். அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது.

வாசனை திரவியம்

இந்நிலையில், தற்போது வாசனை திரவியம் ஒன்றை இளவரசி மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு 'DIVORCE' (விவாகரத்து) என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் தான் சமூகவலைதளத்தில் சுவாரஸ்யமான விவாதத்தை கிளப்பி உள்ளது. 'கணவருக்கு விவாகரத்து முதல் எல்லாமே இன்ஸ்டாகிராம் வாயிலாகத்தான் இளவரசி கொடுக்கிறார்' என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
செப் 10, 2024 16:44

வாட்சப்பில், போனில் தலாக் தலாக் தலாக் என்று முஸ்லீம் ஆண்கள் மட்டும் தான் சொல்லமுடியுமா முஸ்லீம் பெண்களும் சொல்லமுடியும், என்று ஆணும் என்னும் சமம் என்பதை இந்த வாக்கியம் சொல்லுகின்றது.


Kumar Kumzi
செப் 10, 2024 14:11

அட பாவத்தே மூர்க்கத்துக்கு வந்த ரோதனை அப்போ முத்தலாக் இல்லையா வாளுக்கு மதமாறிய கொத்தடிமைங்க பாவம்ல ஒரிஜினல் இஸ்லாமிய அரேபியன் கெத்து இங்கிருக்கும் மதமாறிகள் ஹாஹா ஹோஹோனு கூவுவுவானுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 13:20

அரபு பெண்கள் சுத்தபத்தமானவங்களாச்சே ????


சமீபத்திய செய்தி