உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி; சொல்கிறார் எலான் மஸ்க்!

எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி; சொல்கிறார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, அதிபர் டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்று ஒன்றை உருவாக்கி உள்ளார். இத்துறையின் தலைவராக எலான் மஸ்க் உள்ளார். இவரது குழுவினர் ஒவ்வொரு அரசு துறையாக உள்ளே நுழைந்து, தேவையற்ற அரசு செலவினங்களை கண்டறிந்து தடை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தேவையற்ற அரசுத்துறை ஊழியர்களை தானாக முன்வந்து வேலையில் இருந்து விலகிக் கொள்ளவும் வற்புறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கிய யுஎஸ்எய்ட் நிறுவனத்தையும் மூடிவிட்டனர். இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் பலரும், எலான் மஸ்க்கை அவருக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்க்கின்றனர்.இது மட்டுமின்றி, சமீபத்தில் எழுத்தாளர் ஆஷ்லே க்லேர், தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு மஸ்க் பதில் எதுவும் கூறாத நிலையில், அவரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது எல்லாமே, எக்ஸ் சமூக வலைதளத்திலேயே தொடர்ந்து நடந்து வருகிறது.இது குறித்து, எலான் மஸ்க் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனக்குச் சொந்தமான தளத்தில் (டுவிட்டர்), நான் அனுபவிக்கும் எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
பிப் 17, 2025 22:09

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எண்ணற்ற அவமானங்கள், திட்டுக்கள், வசவுகள். அவர் அதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை. ஸ்டாலின் வழியை மஸ்க்கும் பின்பற்றுகிறார் போலும்.


Ray
பிப் 18, 2025 04:09

உலகிலேயே கருணாநிதியை விடவா அவமானப் பட்டவர்கள் இருக்கப் போகிறார்கள்? World will accept anything except your intelligence. உன்னுடைய புத்திசாலித்தனத்தைத் தவிர எதையும் உலகம் ஏற்றுக்கொள்ளும் என்றொரு ஆங்கில பழமொழி தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும்தான் என்று தெரிகிறது


Ray
பிப் 17, 2025 20:56

IT IS THE MARK OF EDUCATED MIND TO BE ABLE TO ENTERTAIN A THOUGHT WITHOUT ACCEPTING IT. - ARISTOTLE


அசோகன்
பிப் 17, 2025 17:18

உங்க கருத்துக்கும் செய்திக்கும் சம்மந்தம் இல்லையே பாஸ்......... நல்ல மனிதர்களை கண்டால் இவர்களுக்கு பிடிக்காது


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 17, 2025 16:29

வித்தியாசமான ஆனால் பிராக்டிகலான மனிதர். அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது அவர்கள் வாழ்க்கை முறை. இதில் ஆண் ஏதாவது ஒரு வகையில் பிரபலமானால் பிரிந்தவர் புறங்கூறுவது என்பது சாதாரண விஷயம். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சாரம் கொண்ட வாழ்க்கை முறை.


முக்கிய வீடியோ