உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய வம்சாவளி மேயர் மம்தானி vs டிரம்ப் மோதலுக்கு முற்றுப்புள்ளி

இந்திய வம்சாவளி மேயர் மம்தானி vs டிரம்ப் மோதலுக்கு முற்றுப்புள்ளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது.அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார். தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதே போல் மம்தானியை டிரம்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப், அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மம்தானி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. சந்திப்புக்கு பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்ய முடியும்எங்களுக்கு ஒரு பொதுவான விஷயம் உள்ளது. இந்த நகரத்திற்காக மிகவும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம். மேயரை வாழ்த்த விரும்பினேன். ஆரம்பகால முதன்மைத் தேர்வுகளில் தொடங்கி, பல புத்திசாலி மக்களுக்கு எதிராக அவர் உண்மையிலேயே நம்பமுடியாத பந்தயத்தை நடத்தினார். மேலும் அவர் அவர்களை எளிதாக வென்றார், நான் நினைத்ததை விட நிறைய விஷயங்களில் அவர்கள் உடன்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை என்ன?

வாடகை, மளிகைப் பொருட்கள், பயன்பாடுகள், மலிவு விலை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் வீட்டுவசதி போன்ற பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாக மம்தானி கூறினார். மேலும் மம்தானி கூறியதாவது: அதிபர் டிரம்ப் உடனான உரையாடலை நான் பாராட்டுகிறேன். நியூயார்க்கர்களுக்கு மலிவு விலையில் அனைத்தும் கிடைக்க இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.இன்று எங்களுக்கு ஒரு சந்திப்பு நடந்தது, அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக்கு நியூயார்க் நகரம் மிகவும் பிடிக்கும். இந்த மேயர் பதவியில் உண்மையிலேயே சிறப்பாக இருக்கக்கூடிய சில விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தியாகு
நவ 22, 2025 10:07

என்னதான் அமெரிக்கா மேயராக இருந்தாலும் அவர் பிற்காலத்தில் தனது குணத்தை காண்பிக்க வாய்ப்புண்டு. ஏன்னா அமைதி டிசைன் அப்படி.


Ramesh Sargam
நவ 22, 2025 08:14

ஒரு நாள் கடுமையாக பேசி அடித்துக்கொள்கிறார்கள். பிறகு ஒற்றுமையுடன் இருப்பதுபோல காட்டிக்கொள்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளை எப்படி நம்புவது? வாக்களிப்பவர்கள் மடையர்கள் என்று இவர்கள் கருதுகிறீர்களா?


Sun
நவ 22, 2025 08:08

நியூயார்க் நகர மேயர்தான் நான் இன்று அதிபர் டிரம்பை சந்தித்தேன். இந்தந்த விசயங்கள் குறித்து ஆலோசித்தோம் என பேட்டி அளிக்க வேண்டும். நியூ யார்க் நகர மேயர் என்னவோ வெளி நாட்டு தலைவர் போல தனக்கு சமமாக டிரம்ப் பேட்டி அளிப்பது தவறு. முதலமைச்சர் ஸ்டாலின் புதுடெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தால் முதல்வர்தான் வெளியில் வந்து பிரதமரை சந்தித்தேன் தமிழகம் குறித்த விசயங்களை ஆலோசித்தோம் என பேட்டி அளிப்பார். இங்கு நியூ யார்க் நகர மேயரை சந்தித்ததை டிரம்ப் பேட்டி அளிக்கிறார். இது அமெரிக்க அதிபர் பதவிக்கு அழகல்ல. டிரம்ப் பதவி காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக் கே உண்டான அந்த கெத்தே போய் விட்டது.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
நவ 22, 2025 09:52

டிரம்ப் அமெரிக்காவில் அதிரடிகாரர்


Modisha
நவ 22, 2025 08:00

In all words of war trump draws first blood and loses all blood.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை