உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு சர்வதேச பெண் பாடகர் விருது

பிரபல பாடகி எஸ்.ஜே.ஜனனிக்கு சர்வதேச பெண் பாடகர் விருது

வாஷிங்டன்: பிரபல இசையமைப்பாளர், பின்னணி பாடகியுமான எஸ்.ஜே.ஜனனிக்கு, 2024ம் ஆண்டின் சிறந்த சர்வதேச பெண் பாடகர் விருது கிடைத்து உள்ளது.அமெரிக்காவின் அட்லாண்டாவில் செயல்படும் சர்வதேச பாடகர் மற்றும் பாடலாசிரியர் சங்கம்(ஐஎஸ்எஸ்ஏ) சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் சிறந்த பாடகர், பாடகி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படும். இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து இசைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.அந்த வகையில், 2024ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச பெண் பாடகி விருதை தமிழகத்தைச் சேர்ந்த எஸ் .ஜே.ஜனனி , ஐஎஸ்எஸ்ஏ நிறுவனர் டமானி டோவிடம் இருந்து விருதை ஜனனி பெற்றுக் கொண்டார். அப்போது, விழாக்குழுவினர் பலத்த கரகோஷம் எழுப்பினர். விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜனனி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், விருது கிடைக்க செய்ததற்காக கடவுளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். எஸ்.ஜே. ஜனனிக்கு, ப பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை