உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: மீண்டும் தடை விதித்தது நீதிமன்றம்!

பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: மீண்டும் தடை விதித்தது நீதிமன்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அதிபர் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, 'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது. தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என கூறப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dhvfarms&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த உத்தரவு பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஜனவரி 24ம் தேதி, 'இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்தார். இந்நிலையில், மற்றொரு அமெரிக்க நீதிபதியும் இதேபோன்று தடை விதித்து உத்தரவிட்டார்.இது குறித்து அமெரிக்கா மாவட்ட நீதிபதி டெபோரா கூறியதாவது: பிறப்புரிமை தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை நாட்டின் எந்த நீதிமன்றமும் ஆதரிக்கவில்லை. இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது. இன்று அமெரிக்கா மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே அமெரிக்கா குடிமகனாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M. PALANIAPPAN
பிப் 06, 2025 10:23

தடை விதித்தது நீதி மன்றம், நியாயாமான தீர்ப்பு


GMM
பிப் 06, 2025 10:15

சட்ட விரோத பெற்றோர் என்றால், பிறக்கும் குழந்தையும் சட்ட விரோத குடிமகன் தான் . அவர்களுக்கு ஒரு தாய் நாடு இருக்கும். டிரம்ப் நிர்வாக உத்தரவு மீது, ஜனநாயக அமெரிக்கா மீது சில நீதிமன்றங்கள் தன்னிச்சையாக கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் இல்லை. டிரம்ப் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவர். உலகில் பல நீதிபதிகள் அரசுக்கு ஆலோசனை கூறாமல் அடக்கி ஆள விரும்புகின்றனர். சட்ட விதிகள் இன்று அதிகம் பயன்படுத்துவது இல்லை. இஷ்டம் போல் உத்தரவு. இதில் இந்தியாவை மிஞ்ச முடியாது.


Senthoora
பிப் 06, 2025 13:56

ஒரு விமானத்தில் பயணிக்கும்போது , தற்செயலாக ஒரு குழந்தை பிறந்தால் , அந்த விமானம் அந்த நேரத்தில் எந்த நாட்டால் பிறந்ததோ அதே நாட்டு குடியுரிமை வழங்கப்படும். சிங்கப்பூரில் Working visa வில் வேலை செய்யும் பெண்கள், 3 மாதத்துக்கு ஒருமுறை Pregnancy Test செய்யப்படணும். கர்ப்பமாய் இருந்தால் உடனே நாட்டைவிட்டு வெளியேற்ற படுவார்கள். காரணம் சிங்கப்பூர் குடியுரிமை கொடுக்கணும், அதை தவிர்க்க சர்வதேச குடியுரிமை சட்டத்தை மதிக்கிறது.


ديفيد رافائيل
பிப் 06, 2025 10:10

Parliament ல சட்டமா கொண்டு வந்து அமுல் படுத்தியிருந்தா court ல எந்த நீதிபதியும் கேள்வி கேட்க முடியாம இருந்திருக்கும். அமெரிக்க அதிபர் தன்னோட அதிகாரத்தை அறிவிப்பாக மட்டுமே பயன்படுத்தியதால் தான் இப்படி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை