உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டனை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்: 2ம் இடத்தில் சீனர்கள்

பிரிட்டனை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்: 2ம் இடத்தில் சீனர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியது.39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரிட்டன் அரசு கூறியது.இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரிட்டனின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது.பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது. இது தான் இப்போது சரிந்து வருகிறது.அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரிட்டனை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர்.அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது.குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது.எச்சரிக்கை இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரிட்டன் சென்றுள்ளனர். குடியேற்றத்தில் ஐரோப்பா அல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது.ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரிட்டனின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை