உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  நாகாலாந்தில் பரவும் காட்டுத்தீ; வான் வழியாக கட்டுப்படுத்த நடவடிக்கை

 நாகாலாந்தில் பரவும் காட்டுத்தீ; வான் வழியாக கட்டுப்படுத்த நடவடிக்கை

கோஹிமா: நாகாலாந்தின் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக பற்றி எரிவதால், வான்வழியாக தீயை அணைக்கும் பணியை மேற்கொள்ள மீட்புக்குழு திட்டமிட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக, அருகில் உள்ள மலைப்பகுதிகளுக்கும் தீப்பிழம்புகள் பரவுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கோஹிமா மாவட்டத்தின் கொனோமா பகுதியை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கில், கடந்த 12ம் தேதி சிறிய அளவில் தீ ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால், அங்குள்ள வனப்பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மையத்தின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டது. எனினும், மோசமான வானிலை காரணமாக அருகே உள்ள மலைப்பகுதிக்கும் தீ பரவியது. மூன்று நா ட்களுக்கும் மேலாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிவதால், வான் வழியாக தீயை அணைக் கும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வா கம் திட்டமிட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத கரடுமுரடான பகுதியில் தீப்பற்றி எரிகிறது. இதை அணைக்க, விமானப்படை உதவியை நாடியுள்ளோம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து நான்கு மலையேற்ற வீரர்களை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீயை மூட்டியபோது தற்செயலாக விபத்து ஏற்பட்டதாகவும், தண்ணீர் எடுத்து அணைப்பதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவியதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மலையேற்றத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாநில அரசு சார்பில் வான்வழியாக ஆய்வு நடத்தப்பட்டதில், ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையானது தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் அரியவகை தாவரங்கள் மற்றும் வன உயிரினங்கள் இருப்பதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை