உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இன்று (டிசம்பர் 30) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். கடந்த 1991 - 96 மற்றும் 2001 - 06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

யார் இந்த கலிதா ஜியா

* 1945ம் ஆண்டில் பிறந்த கலிதா ஜியா, 1960ல் அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார்.* வங்கதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ரஹ்மான், பிற்காலத்தில் முஜிபூர் ரஹ்மான் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவில் அதிபராக பொறுப்பேற்றார்.* ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலிதா ஜியா, 1981ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலுக்கு வந்தார். 1984ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து இருக்கிறார்.* இவரது கட்சி பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டது. இருந்தாலும் கலிதா ஜியா முக்கியமான அரசியல் கட்சி தலைவராக திகழ்ந்து வந்தார். * 17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த கலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மறைவு குறித்து தகவல் அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா-வங்கதேச உறவுகளுக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anand
டிச 30, 2025 13:34

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து விஷம செயலில் ஈடுபட்டவர். காலமாகிவிட்டதால் இவரைப்பற்றி மேலும் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆரூர் ரங்
டிச 30, 2025 11:18

இந்திய எதிர்ப்பு அரசியல் செய்து பிழைத்து ஆட்டையை போட்ட குடும்பம். இந்தியாவை விட பாக் குக்கு நெருக்கம். அதிகபட்ச ஆட்களை இந்தியாவுக்குள் ஊடுருவ உழைத்தவர். பெண் என்பதால் எப்படியும் சொர்க்கத்தில் 72 கிடைக்காது. ஆக இரங்கல் தெரிவிக்கவே தகுதியற்றவர். பூபாரம் குறைந்தது.


Rathna
டிச 30, 2025 11:17

ஹிந்துக்களை படுகொலை செய்வது மற்றும் அவர்களது சொத்துக்களை கொலைகள் மூலம் பிடுங்குவது இவரது கணவர் காலத்தில் ஆரம்பித்து, இவரது காலத்தில் வேகம் பிடித்தது. ஒவ்வரு ஹிந்து குடும்பத்திலும், ஹிந்து பெண்களை ஹிந்து மணமகனுக்கு திருமணம் செய்ய மர்ம கும்பல்களுக்கு பணம் கொடுத்தால் தான், அவர்கள் திருமணம் நடக்கும் என்ற நிலையை இவரும் ஜமாத்தும் கொண்டு வந்தது. அல்லது பெண்கள் கடத்தப்படுவார்கள். இது தெரியாதவர்கள் இரக்கம் தெரிவிப்பது வேடிக்கை.


N.Purushothaman
டிச 30, 2025 10:17

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ...


duruvasar
டிச 30, 2025 10:10

200 ரூபாய் பயனாளிகளுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரியாது.


mindum vasantham
டிச 30, 2025 08:22

வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தான் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது


Ambika. K
டிச 30, 2025 07:45

திராவிடம் அறியாத வங்கத்து பெண் சிங்கம். . ஊழல் வழக்குகளில் 17 வருடம் தண்டனை பெற்றவர் .


Senthoora
டிச 30, 2025 11:08

திராவிடம் அறிந்துதான் என்ன, அறியாமல் தான் என்ன, நீங்க அறிந்திருக்கிறீங்களே.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ