வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்று சும்மாவா சொன்னார்கள்,இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அநியாயமாக பலியாகிறார்கள்.
“சர்வதேச அளவில் செயப்பட்ட கொலைகள்” மற்றும் “சர்வதேச அளவில் வழங்கப்பட்ட ஆயுதங்கள்” காரணமாக அமெரிக்கா செழித்து வருகிறது. ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டில் நடக்கும் கொலைகள் காரணமாக அதே அமெரிக்கா வேகமாக சீரழிந்து வருகிறது
நான் பார்த்தவரை இந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது இதனை தடுக்க ஜோ பைடன் தலைமையிலான அரசு தூங்கிவிட்டது
எதெற்கெடுத்தாலும் மோடி பற்றி குறை சொல்வது போல் அமெரிக்கா ஜனாதிபதி குறை சொல்கின்றார்கள். அமெரிக்கா ஜனாதிபதி என்பவர் பெரும்பாலும் வெளியுறவு பற்றிய முடிவுகளையே தீர்க்கமாய் எடுக்க முடியும். தன்நாடு பற்றிய மற்ற முடிவுகளை எடுக்கும்பொழுது தனது கட்சியினரிடமே முதலில் வாக்கெடுப்பு செய்ய வேண்டும். பின்பு ஒட்டுமொத்த வாக்கெடுப்பில் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணங்களின் தனிப்பட்ட முடிவும் இதில் முக்கியம். கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் அமெரிக்கா ஜனாதிபதி என்பவர் ஒரு பொம்மலாட்ட பொம்மையே. நிர்வாக விஷயத்தில் ஒவ்வொரு மாகாணமும் ஒரு தனி நாடு போன்ற அதிகாரம் படைத்தவை.. அவர்களே இதை போன்ற விஷயங்களில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். அதிபர் கூட இதில் சிறிதளவும் தலையிடமுடியாது.