உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் திடீர் ராஜினாமா: 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமனம்

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் திடீர் ராஜினாமா: 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரீஸ்: பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.பிரான்ஸ் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். சமீப காலமாக அந்நாட்டு மக்கள், அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வந்தன. இதனை சரி செய்யவும், மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கவும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய மேக்ரான் ஆலோசித்து வந்தார்.இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட மேக்ரான், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவித்துள்ளார். பிரான்சின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எலிசபெத் போர்ன் ஆவார்.

இளம் பிரதமர்

இந்த நிலையில் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் மேக்ரான். 34 வயதான கேப்ரியல் அட்டல் ஓர் ஓரினச்சேர்க்கையாளர். இதன்மூலம், பிரான்சின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவரானார். மேலும் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமர் ஆவது இதுவே முதன்முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை