உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை: புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை: புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர்.வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது ,இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த இடைக்கால அரசு இன்று(அக்.17) புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது. இந்த சாசனத்தை எதிர்த்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பார்லி. வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் இறங்கினர். அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைய மறுக்கவே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் தங்கியிருந்த கூடாரங்களையும் சேதப்பபடுத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

suresh Sridharan
அக் 18, 2025 09:55

உன்ன அடுத்த நாட்டுடன் போரிடுவது இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் அண்ணன் தம்பி மாமன் மச்சான் அக்கம் பக்கம் யார் என்று பார்க்காமல் கொள்வது அடுத்த நாட்டு வேண்டாத விரோத போக்கு


D Natarajan
அக் 18, 2025 07:58

யூனுஸ் இருக்கும் வரை பங்களா தேசுக்கு அழிவு காலம் தான். அமைதியாக இருந்த நாட்டை இரத்தக் களரி ஆக மாற்றி விட்டார்கள்


நிக்கோல்தாம்சன்
அக் 18, 2025 07:43

ஒருபுறம் மக்கள்தொகை பெருக்கம் என்று கட்டுப்பாடில்லாத வாழ்க்கை , இன்னொருபுறம் எதோவொரு நாடு எதற்காக அள்ளிஅள்ளி கொடுக்கிறது என்பது புரியாத மூடர்கள் . இரண்டும் சேர்ந்தாள் அழிவுப்பாதை நிச்சயம்


அப்பாவி
அக் 18, 2025 06:14

அவிங்களுக்கு உகந்த ஒரே சாசனம் மூர்க்க சாசனம்தான்.


Kasimani Baskaran
அக் 18, 2025 05:24

பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாத யூனுஸ் எப்படி அரசியல் சாசனத்தை மாற்ற முடியும்?


visu
அக் 18, 2025 10:41

தேர்தலிலேயே நிற்காத யூனுஸ் என்று கேளுங்க அதுசரி இந்திரா காந்தி அவசர நிலையில் அரசியல் சாசனத்தில் சேர்த்த மத சார்பற்ற என்ற வார்த்தையை நீக்க 3 ல் 2 மஜுரிட்டி தேவையா


karupanasamy
அக் 18, 2025 01:09

பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்த பாக்கிஸ் அடிவருடி முகமது உஊஊனூஸை தேர்ந்தெடுத்த பிக்க்காரிதேசி முசுலீம்கள் அழியட்டும் இது ஏக இறைவனின் விருப்பம்.


Senthoora
அக் 18, 2025 06:20

காமெடிக்க ஏகாதிபதியதால் நியமிக்கப்பட்டவர் முகமது ஊனூஸ், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, சீனாவுக்கு அச்சுறுத்தளாக, அமைதியை குலைக்க அமெரிக்கா செய்யும் தந்திரம் , அதில் இவர் மாட்டிகிட்டார்.