உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜார்ஜ் சோரசுக்கு உயரிய விருது: அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு

ஜார்ஜ் சோரசுக்கு உயரிய விருது: அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தன் அறக்கட்டளை வாயிலாக பல நாடுகளுக்கு நன்கொடை அளித்து, அங்கு தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு, அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதை வழங்கியதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிகவும் உயரிய சிவிலியன் விருதான, 'மெடல் ஆப் பிரீடம்' எனப்படும் சுதந்திர விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அரசியல், விளையாட்டு, கலை என பல துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, இந்த விருது அமெரிக்க அதிபரால் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதை, அதிபர் பதவியில் இருந்து விரைவில் விலக இருக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் நேற்று முன்தினம் வழங்கினார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, நடிகர்கள் மைக்கேல் பாக்ஸ், டென்சல் வாஷிங்டன் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.ஹங்கேரியில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருடைய சார்பில் அவரது மகன் விருதைப் பெற்றுக் கொண்டார்.ஜார்ஜ் சோரசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரபல தொழிலதிபர், குடியரசு கட்சி ஆதரவாளர் எலான் மஸ்க், இதை கேலிக்குரிய நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.தன், 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல நாடுகளுக்கும், ஜார்ஜ் சோரஸ் நன்கொடை வழங்கி வருகிறார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான நிதி என்ற பெயரில், அந்த நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் அவர் தலையிடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள குடியரசு கட்சி, ஜார்ஜ் சோரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.நம் நாட்டிலும், ஜார்ஜ் சோரஸ் தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை வாயிலாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தொடர்புடைய அமைப்புக்கு நன்கொடை வழங்கப்பட்டதாக, சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது.காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஜார்ஜ் சோரஸ். அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiK
ஜன 06, 2025 20:43

அடுத்து ஸ்டாலின் இந்த சோரோஸ்க்கு யுனெஸ்கோ விருது கோடுப்பார்.


ராமகிருஷ்ணன்
ஜன 06, 2025 20:25

ஜார்ஜ் சோர் அஸூக்கு கழஞர் விருது தரலாம். அதற்க்கு தகுதியானவர். திமுக அரசு அதற்கான முயற்சியில் இறங்கலாம். ஓட்டுக்காக செய்யலாம்


Laddoo
ஜன 06, 2025 16:37

அடுத்து பிடென் அறிவிப்பு: உலகம் மகா அரசியல் வாதி திருமதி சோனியா காந்தி


N.Purushothaman
ஜன 06, 2025 12:22

இதை அவன் அப்படியே தொடரும் போது தென்னிந்தியாவிலும் பா.ஜ ஆட்சி அமைத்திடும் ...


SELLIAH Ravichandran
ஜன 06, 2025 12:07

He's debating religion people with money.


பாமரன்
ஜன 06, 2025 09:11

ஜார்ஜ் சோர்ஸ் கிட்ட நிதி வாங்கிதான் காங் கட்சி நடத்தனும்னு இந்த தளத்தில் மற்றும் ஜெனரலாவே நம்புபவர்கள் நிச்சயமாக பாஜக தேர்தல் நன்கொடை மூலம் தான் கட்சி நடத்துதுன்னும் நம்புவாங்க... என்ன சொல்றீக மக்கா... இதெல்லாம் பாக்கு போடும் காசு... சாப்பாடு வேற எடத்துல இருந்து கிடைக்குதா... யெஸ் அதைப் பற்றி டிஸ்கிஸ் பண்ணிக்கோங்க....கெத்துன்னு சொல்லிக்கலாம்....


M Ramachandran
ஜன 06, 2025 08:39

அப்போ நம்ம ராவுளுக்கு விருதும் விருந்தும் காத்திருக்கு னு சொல்லவராங்களா


Thiyagarajan S
ஜன 06, 2025 17:08

ஹாஹா


Dharmavaan
ஜன 06, 2025 08:29

என்ன நிலை


கண்ணன்
ஜன 06, 2025 08:08

நல லஙேளை, புத்தி பேதலித்தவரையோ அல்லது அவரது கட்சியையோ அம்மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை


பேசும் தமிழன்
ஜன 06, 2025 07:53

இவனது நன்கொடை பட்டியலில்.. நம்ம இத்தாலி கான் கிராஸ் கட்சிக்கு முக்கிய இடமுண்டு ....அவரின் சொல்படி தான் இங்கே இத்தாலி போலி காந்தி கும்பல் இந்திய அரசுக்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள்.


புதிய வீடியோ