உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..! அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..! அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; பிணைக் கைதிகளாக பிடிபட்ட பலர் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வர். கொல்லப்பட்டது யாஹ்யா சின்வர் தான் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு எங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகிற்கும் நல்ல நாள். டி.என்.ஏ., பரிசோதனை மூலம் சின்வார் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சின்வார் கொல்லப்பட்டதை அறிந்து நெதன்யாகுவை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்ட சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதன் மூலம் உலகில் எங்கும் எந்த பயங்கரவாதியும், நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

அமைதிக்கு தடை

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனால் கூறியதாவது: அமைதிக்கு தடையாக கருதப்படும் ஒரு பயங்கரவாதியின் கொலை, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முன்னேற்றத்தின் அறிகுறி. கடந்த சில வாரங்களாக, சின்வார் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டதால், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sridhar
அக் 18, 2024 13:08

எப்படி தில்லா நம்ம ஆளு காஜா பகுதியிலேயே இருந்தார் பாருங்க. அந்த தைரியம், அதுலதான்யா நம்ம ஆளு நிக்குறார் சரி, ஒரு ஆள தூக்கிட்டா பிரச்சன தீந்திடுமா? கடைசி தீவிரவாதி இருக்கிறவரை இந்த பிரச்சனை ஓயாது. அதுக்குவேண்டி ஒவ்வொரு கொழந்தையையும் கொல்றது நல்லா இருக்காது. அவங்கள நல்ல ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்து சின்ன வயசுலேந்தே நல்ல விஷயங்களை கத்துக்கொடுத்து நல்ல மனுஷங்களா வளர்த்தா எல்லாமே சரி ஆயிடும். ஆகவே அந்த பகுதியில இருக்குற பதினைந்து வயசுக்கு குறைவா இருக்குற குழந்தைங்க எல்லோரையும் இஸ்ரேலுக்கு தூக்கி கொண்டுவந்துருங்க. பெரியவங்கள உங்களுக்கு பிடிச்ச விதத்துல டீல் பண்ணிக்கோங்க. அன்னைக்குதான் மத்தவங்க பாடம் கத்துக்குவாங்க. என்னைக்கு கத்துக்கறாங்களோ அன்னைக்குதான் உலகத்துக்கு நல்ல நாள்


sivakumar Thappali Krishnamoorthy
அக் 18, 2024 12:09

இங்கே B ஜே பி ஆட்சியில் இருந்தும், ஆதாரங்கள் இருந்தும் கை கட்டி வேடிக்கை காண்பிக்கின்றது ஊழல் வாதிகளுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் இல்லனா? இருந்தும் என்ன bayan.


Anand
அக் 18, 2024 11:41

தீவிரவாதத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்...


Madras Madra
அக் 18, 2024 11:00

மேற்கு உலகத்தால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு இனம் யூத இனம் அந்த மேற்கு உலகம் மட்டும் அல்லாமல் உலகம் அனைத்துக்குமே மிக பெரிய நன்மை செய்திருக்கிறது இஸ்ரேல் உலகின் தலை சிறந்த மாவீரர்கள் வாழும் நாடு சிறந்து அமைதியாக வாழ தொடர்ந்து முயற்சிக்கும் நாடு வாழ்த்துவோம்


RAMAKRISHNAN NATESAN
அக் 18, 2024 09:52

இப்படி பைடன் பேசிட்டாரே.... அவருக்கு மூர்க்கத்தினரால் பிரச்னை வருமா ????


Rajathi Rajan
அக் 18, 2024 11:46

ஒருவேளை உனக்கு வரலாம்


sundaran manogaran
அக் 18, 2024 09:48

தீவிரவாதம் ஒழியட்டும். இஸ்ரேல் உலகிற்கு வழிகாட்டி மதத்தின்பெயரால் மக்களை கொன்று குவிக்கும் தீவிர வாதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்


Balasri Bavithra
அக் 18, 2024 09:16

காலிஸ்தான் தீவிரவாதி அமெரிக்காவில் மரியாதை உடன் உங்க தயவில் நல்லா இருக்கான் ..அமெரிக்கா பிடன் அரசு ஒரு தலை வலி


veeramani
அக் 18, 2024 08:55

ஆண்டவன் படைத்த அமைதியான உலகில், மதத்தின் பெயரால் தீவிரவாதம் உருவாகிறது. இது கண்டிப்ப்பாக வேரோடு அழிக்க வேண்டியதாகும். தீவிரவாதம் செய்யச்சொல்லி எந்த கடவுளும் கேட்டுக்கொண்டதேயில்லை. எனவே தீவிரவாதிகள் அனைவரும் விசாரணை இல்லாமல் அழிக்கப்படவேண்டியவர்கள்


raja
அக் 18, 2024 08:36

அட பொங்கையா ஒரு தீவிரவாதி உயிரோட இருந்தாலும் அவன் தலைவர் ஆவான்...ஆகவே ஒருத்தன் கூட உயிரோட இருக்க கூடாது... புரிந்ததா ஒருத்தன் கூட...


Mohan
அக் 18, 2024 10:02

அப்டி பாத்தா இந்த உலகத்தில் உள்ள பாதி பேர் கொல்லப்படணும் 99/100 பேர் அவுங்க மத்ததுல அப்டித்தான் இருக்கானுங்க ..ம் இயற்கை தான் கருணை காட்டணும்


raja
அக் 18, 2024 14:06

அததான் நானும் சொல்றேன் நண்பா... புரிந்ததா ஒருத்தன் கூட....


Palanisamy Sekar
அக் 18, 2024 07:24

மனித குல எதிரிகள் கொல்லப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். காசா வாழ் மக்களுக்கு இனி அதிக அளவுக்கு மத நெருக்கடியோ அல்லது பயங்கவாதமோ பயமுறுத்தாது. மக்கள் வாழ உகந்த நாடாக மாற்றிட இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வரவேண்டும். எல்லையில் இனி தீவிரவாதம் குறைய வாய்ப்புள்ளது. வீண் வறட்டு ஜம்பத்துக்கு வேறு ஒருவரை தலைவராக நியமித்து தீவிரவாதிகள் கொக்கரிக்க கூடும். அந்த பதவிக்கு வருவோருக்கு உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது. இஸ்ரேல் ராணுவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய நாள். நன்னாள். வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி