உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் அமைப்பு கடும் விளைவை சந்திக்க நேரிடும்; இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் ஆதரவு

ஹமாஸ் அமைப்பு கடும் விளைவை சந்திக்க நேரிடும்; இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப், ''ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'', என்றார்.இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார். அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்தார். இது தொடர்பாக, அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கொன்றார்கள். எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர். அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும். ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த தாக்குதல் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

duruvasar
அக் 29, 2025 16:12

ஒரு மூர்கனை அழிக்க இன்னொரு மூர்க்கனை அனுப்பியுள்ள ட்ரும்ப் பாராட்டுக்குரியவர் .


Senthoora
அக் 29, 2025 14:37

இவர்போட்ட கைஎழுத்து எல்லாம் இப்படித்தான் ஆவுது. இன்று போட்ட கையெழுத்து கம்போடியா, தாய்லாந்து அமைதி ஒப்பந்தமும் என்னவாகப்போகுதோ?


V K
அக் 29, 2025 12:47

அப்போ அடுத்த வருஷம் நோபல் பரிசு கிடையாதா? அமைதி பேச்சு வார்த்தை நாடகமே


அம்மாப்பேட்டை ஆதவன்
அக் 29, 2025 11:21

டிரம்ப் இல்லாமல் இஸ்ரேல் இல்லை. இஸ்ரேல் இல்லாமல் அமெரிக்கா இல்லை.


Madras Madra
அக் 29, 2025 10:42

அறிவற்ற மூர்க்கர்களை திருத்தவே முடியாது அழிவுக்கு தயாராக இருப்பவர்களை இப்படித்தான் செய்ய முடியும்


cpv s
அக் 29, 2025 10:31

Zero tolerance for terrorist so attack 24/7


RK
அக் 29, 2025 10:31

தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது. வாழ்த்துக்கள்.


சாமானியன்
அக் 29, 2025 10:10

டிரம்ப் ஒரு டூபாக்கூர். அமெரிக்காவின் சாபக்கேடு.


RAJ
அக் 29, 2025 10:10

சொல்லிகிட்டே இருக்காரே தவிர பாம்ப வெளிய வுடமாட்டங்கிறாரே...


சமீபத்திய செய்தி