உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 2 பேர் பலி; மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரம்

சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 2 பேர் பலி; மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிஜிங்: சீனாவின் குய்சோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது. மழை பெய்து வருவதால், மீட்பு பணிகள் தடைபட்டுள்ளன. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ராணுவ அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் நீண்ட நேரமாக ஈடுபட்டு உள்ளனர். சீனாவில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tiruchanur
மே 22, 2025 21:35

சப்பை மூக்கன்கள் போனா நல்லது


Ramesh Sargam
மே 22, 2025 20:18

பாக்கிஸ்தான் நாட்டுக்கு உதவி செய்தால் இந்த நிலைமைதான், இயற்கையே தண்டிக்கும்.


சிங்
மே 23, 2025 11:00

அட அறிவே... நேத்திக்கி உ.பி ல பெஞ்ச மழையில் 35 பேர் இறப்பு. இதெல்லாம் இயற்கை.


அப்பாவி
மே 22, 2025 20:17

அங்கேயும் பெங்களூர் மாடல் தான் போலிருக்கு. சாலைகள்.


Nada Rajan
மே 22, 2025 20:16

ஆழ்ந்த இரங்கல்


சமீபத்திய செய்தி