வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உலகெங்கிலும் உள்ள அமைதி வழியை நாட வேண்டும். அமைதி மார்க்கம் என்று வாயில் பேசினால் போதுமா?
மேலும் செய்திகள்
ஹவுதி ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலில் பெரும் பதற்றம்
16-Sep-2024
ஜெருசலேம்: வடக்கு இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் மீது இன்று 140 ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா படையினர் தாக்கினர்; பதிலுக்கு இஸ்ரேலிய விமானப்படை லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.பேஜர் மற்றும் வாக்கி டாக்கி குண்டு மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஹிஸ்புல்லா படையினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வடக்கு இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா படையினர் 140 ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனினும், இந்த தாக்குதல் இஸ்ரேலில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mxgcrmxq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பதிலடி தரும் நோக்கத்துடன் இஸ்ரேல் விமானப்படை களம் இறங்கியது. லெபனான் நாட்டில் பதுங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று மாலை தாக்குதல் நடத்தியது.இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.நாளுக்கு நாள் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமைதி ஏற்படுத்தும் முயற்சியில், ஐ.நா., மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டுள்ளன.இஸ்ரேல் ராணுவத்தினர் கூறியதாவது: ஹிஸ்புல்லா படையினர் வீசிய ஏவுகணைகள், கோலன் குன்றுகள், சஃபேட் மற்றும் அப்பர் கலிலி ஆகிய பகுதிகளில் விழுந்து வெடித்தன. மெரோன் மற்றும் நெடுவா பகுதிகளும் தாக்குதலுக்கு ஆளாகின. யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறுகையில், தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்
உலகெங்கிலும் உள்ள அமைதி வழியை நாட வேண்டும். அமைதி மார்க்கம் என்று வாயில் பேசினால் போதுமா?
16-Sep-2024