உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து அமைப்பு தலைவர்; வங்கதேசத்தில் கைது

ஹிந்து அமைப்பு தலைவர்; வங்கதேசத்தில் கைது

தாகா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், வங்கதேசத்தின் சத்தோகிராம் என்ற இடத்திற்கு செல்வதற்காக தாகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சென்றார். அங்கு போலீசார் அவரை கைது செய்தனர். கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.சத்தோகிராமில் கடந்த மாதம் 30ல் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக சின்மாய் தாஸ் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !