உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலில் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் பலி

இஸ்ரேலில் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல்அவிவ்: இஸ்ரேலில் ரயில் நிலையத்தில் இன்று (அக்.,01) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். 11 காயமடைந்ததாக கூறப்படுகிறது.லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே ஜப்ஃபா நகரில் சைனாகோகெஜ் ரயில் நிலையத்திற்குள் இரு பயங்கரவாதிகள் புகுந்தனர். மும்பை தாக்குதல் பாணியில் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர் 11 பேர் காயமடைந்தனர்.இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கி்னறன.இதற்கிடையே இரு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ரயி்ல் நிலையத்திற்குள் புகுந்த காட்சிகள் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
அக் 02, 2024 13:30

சமீபத்தில் வந்த செய்தி இங்கும் தேர்தல் நடந்து முடிந்த குறுநில மன்னர்கள் மீண்டும் ஆளப்போகும் இடத்திலும் குழந்தைகள் ஒன்று கூடி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள் என்ற செய்தி வந்தது . ஆக ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் நிம்மதியாக வாழவிடாமல் தடுக்க பல வழிகளில் வாரிசுகளை உருவாக்கி தொடர்ந்து இன்னல்கொடுப்பதை முழுநேர தொழிலாக வளர்த்துவிட்டார்கள் , இதே சண்டை, இதே பாதுகாப்பு,, இதே கொலைகள், கடல் அலைகள் என்றுதான் ஓயுமோ


N.Purushothaman
அக் 02, 2024 09:06

வீர வசனம் பேசுற கொமேனி யுத்த காலத்திற்கு வந்து சண்டை போட தயாரா ?


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2024 05:57

தீவிரவாதிகளை வெகு சீக்கிரத்தில் நியூட்ரலைஸ் செய்ததற்கு இஸ்ரேலுக்கு பாராட்டுகள் , இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே வழக்கம் போல இந்த இருவரும் இந்தியா RSS சார்ந்தவர்கள் என்று ஒரு அறிக்கையை காணோம் ?


J.V. Iyer
அக் 02, 2024 05:20

ஈரான் தலைவர்கள் மற்றும் ஈரான் ஆதரிக்கும் பயங்கரவாதிகள் முற்றும் ஒழிக்கப்பட்டால்தான் அமைதி திரும்பும். இறைவன் இஸ்ரேலை காப்பாற்றுவாராக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை