உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி; எலான் மஸ்க்கிடம் கேட்கிறார் பெண் எழுத்தாளர்!

பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி; எலான் மஸ்க்கிடம் கேட்கிறார் பெண் எழுத்தாளர்!

நியூயார்க்: 'தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை' என்று கூறிய எழுத்தாளர் ஆஷ்லே கிளேர், 'எங்களுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்' என்று மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமூக வலைதளம் எக்ஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி, 12 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், எழுத்தாளரும், பழமைவாத சிந்தனை கொண்டவருமான 31 வயதான ஆஷ்லே கிளேர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்குஎலான் மஸ்க் தான் தந்தை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை மஸ்க் ஆமோதிக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.ஆனால், சர்ச்சைக்குரிய பதிவர் ஒருவர் இட்ட பதிவில் மஸ்க் பதில் அளித்தார். 'ஆஷ்லே கிளேர் கடந்த ஐந்தாண்டுகளாக எலான் மஸ்க் மூலம் குழந்தை பெறுவதற்காக சதி செய்தார்' என்று அந்த பதிவர் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார்.அதற்கு பதில் அளிக்கும் வகையில் மஸ்க், 'whoa' என்று பதிவிட்டார். இதற்கு, ஆச்சர்யம் அல்லது வியப்பு அடைவதாக பொருள் கொள்ள முடியும்.மஸ்க்கின் பதிலால் ஆத்திரம் அடைந்த ஆஷ்லே கிளேர், ''எலான், கடந்த பல நாட்களாக நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. 15 வயதில் நான் உள்ளாடையில் இருந்தபோது எடுத்த தனிப்பட்ட படங்களை வெளியிட்ட நபர் செய்யும் அவதுாறுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, எப்போது எங்களுக்குப் பதிலளிப்பீர்கள்' என்று கேட்டு பதிவிட்டார். சிறிது நேரத்தில் அதையும் நீக்கி விட்டார்.எனினும், அவரது பதிவின் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் ஆஷ்லே கிளேரின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட அறிக்கை:எலான் மஸ்க்கும், ஆஷ்லேவும், தங்கள் குழந்தையை வளர்ப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை தனிப்பட்ட முறையில் தயார் செய்து வருகின்றனர். ஆனால் அதை ரகசியமாக செய்ய முடியாத நிலையை பத்திரிகையாளர் ஒருவர் ஏற்படுத்தி விட்டார். தனது தந்தைக்குரிய பாத்திரத்தை, எலான் மஸ்க் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சந்திரசேகர்
பிப் 17, 2025 05:12

இதெல்லாம் அமெரிக்காவில் சகஜம்.ஹாலிவுட் படத்தை பார்த்தாலே தெரியும்.என்ன எலன் மஸ்க் மிகப்பெரிய பணக்காரர் என்பதால் இந்த விஷயம் பெரிதாக பேசப்படுகிறது.


J.V. Iyer
பிப் 17, 2025 04:33

பணம் நிறைய இருந்தால் புதிய, புதிய பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். சீக்கிரம் பணம் சேர்ப்பது எப்படி என்ற கலை நிறையபேருக்கு கைவந்த கலை


Natarajan V
பிப் 16, 2025 23:41

3 மனைவி, 12 குழந்தைகள். இவர்கள் தான் அவருக்கு உத்வேகம். அத்தனையும் சமாளிக்கும் திறன் பெற்றதனால் தான் அவரால் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா போன்ற கம்பெனிகளை உருவாக்க முடிந்தது. இப்ப புதுசா ஒரு அம்மணி வேற. மேஷ ராசியா... ஏழரை ஸ்டார்ட் ஆய்டுத்து ஓய்....


sankaran
பிப் 16, 2025 22:09

நாளைக்கு இன்னொரு பெண் சோசியல் மீடியாவில் எனக்கு பிறந்த குழந்தைக்கு தகப்பன் எலன் மாஸ்க் என்று கூறுவாள்.. ஒருத்தனிடம் நிறைய பணம் இருந்தால் போதும்... வந்திருவாளுங்க வரிசையா...


Ramesh Sargam
பிப் 16, 2025 21:02

மவுனம் சம்மதம் என்று அர்த்தம்.


தமிழன்
பிப் 16, 2025 19:42

அவனவன் 2ஐ பெத்தாலே வாழ்க்கை அமைத்து கொடுக்க நாக்கு தள்ளிவிடுகிறது இவன் 12 + 1 என முன்னேறிக் கொண்டிருக்கிறான் சரி இவனிடம் இல்லாத பணமா?? என்ஜாய் மச்சி ஹூம் பல்லு இருக்கிறவன் பக்கோடா என்ன சிக்கன் லெக் பீஸே சாப்பிடறான் நாமும் வாழறமே ஒரு வாழ்க்கை மாசாமாசம் இஎம்ஐ, வேலை, சம்பாத்தியம் பொண்டாட்டி டார்ச்சர் டார்ச்சர்.....


V வைகுண்டேஸ்வரன்
பிப் 16, 2025 21:21

ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்....


Karthik
பிப் 16, 2025 19:32

மௌனம் சம்மதம்..


K V Ramadoss
பிப் 16, 2025 19:32

என்ன விதி ஒழுக்கம் இல்லாதவனிடமெல்லாம் பணம் சேருகிறது


Bala
பிப் 17, 2025 00:43

அதுதான் முற்பிறவியின் கர்மா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை