உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: பத்திரிகையாளர் குமுறல்!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்: பத்திரிகையாளர் குமுறல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் தனது துயரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.கனாவில் உள்ள வான்கூவரில் காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர்கள் குழு நடத்திய பேரணிக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது, ​கனடா பத்திரிக்கையாளர் மோச்சா பெசிர்கன் தாக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பேரணிக்கு செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தாக்குதல் நடத்தினர்.​இது 2 மணி நேரத்திற்கு முன்பு நடந்தது, நான் இன்னும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். குண்டர்களைப் போல செயல்பட்ட பல காலிஸ்தானியர்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர், என்னை மிரட்டினர். என்னை அச்சுறுத்தும் வகையில் பேசினர். என் கையிலிருந்து என் தொலைபேசியைப் பிடுங்கிக் கொண்டனர்.நான் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் காலிஸ்தானியர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு சென்று செய்தி சேகரித்து வருகிறேன். எனது ஒரே குறிக்கோள் சுதந்திரமான முறையில் பத்திரிகையில் செய்தி வெளியிடுவதும், என்ன நடக்கிறது என்பதைப் எடுத்துரைப்பதும் ஆகும். நான் சுதந்திரமாக செயல்படுவதால், இது சிலரை விரக்தியடையச் செய்கிறது. காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் மிரட்டினாலும் எனது பணியை கைவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

P NALINI
ஜூன் 10, 2025 20:49

பயங்கரவாதம் எந்த வடிவில் எங்கு இருந்தாலும் ஆபத்துதான்


MARUTHU PANDIAR
ஜூன் 08, 2025 17:34

முந்தைய கனடா அதிபனிடமிருந்து இந்த ஆளு வேறயா அல்லது யோக்கியமான்னு இனிமேல் தான் தெரியும். நம்புவதற்கில்லை.


சிந்தனை
ஜூன் 08, 2025 16:57

உலகை தீண்ட விஷநாகத்தை வளர்த்தவன் அதனால் தீண்டப்படுவது நல்லது தானே


RAJ
ஜூன் 08, 2025 15:55

காலிஸ்தான் கிரிமினல்களை காலி செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது.. பொறுக்கிகளின் முதுகை பிளக்க வேண்டும்..


Padmasridharan
ஜூன் 08, 2025 15:23

"கனாவில்" உள்ள வான்கூவரில் காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர்கள் குழு நடத்திய பேரணிக்கு.. இதை கவனிக்கவும் அய்யா. .. கனா கண்டுகொண்டே "கனடாவில்", டாவை விட்டுவிட்டீர்களா என்று


Santhakumar Srinivasalu
ஜூன் 08, 2025 15:00

இப்படிப்பட்ட வன்முறையான நிலமையில் நம் பிரதமர் அங்கு சென்றால் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை