உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,

9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து ஐ.பி.எம்., நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அர்மாங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.பி.எம்., நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகின் முன்னணி நிறுவனமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், ஐ.பி.எம்., நிறுவனமும் அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து விடுவித்து உள்ளது. கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், நியூயார்க் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றியோர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 'கன்சல்டிங், கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி, கிளவுட் உள்கட்டமைப்பு, விற்பனை மற்றும் ஐடி அமைப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்கள் தான் , இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
மார் 26, 2025 04:07

அதிக நாள் வேலையில் இருந்தார்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...


Jagan (Proud Sangi)
மார் 25, 2025 19:57

அந்த வேலையை இந்தியாவிற்கு தான் அனுப்பி இருப்பார்கள். அங்கேயும் நம்ம ஆளுங்க தான் வேலை செய்யுறாங்க. அவுங்க இங்க திரும்பி வர நேரிடும். இந்தியாவிற்கு /இந்தியர்களுக்கு நட்டமில்லை


ஆரூர் ரங்
மார் 25, 2025 19:38

காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா. எதுவும் நிரந்தரமில்லையடா.


spr
மார் 25, 2025 19:34

கணினி மயமாக்கல், தானியங்கி இயந்திரங்கள் மனித பொம்மைகளைத் தொடர்ந்து AI எனப்படும் செயற்கை நுண்ணறிவும் கோலோச்சப் போகிறது.இனி படித்தவர்கள் மனித முயற்சியால் மட்டுமே நடக்கும் கடைநிலைப் பணிக்கு மாற வேண்டிய கட்டாயம். படிப்பு வீண் என்றாலும், கடைநிலைப் பணியிலும் ஆட்களை வடிகட்ட பொறியியல்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே சாக்கடை துப்புரவு செய்யும் பணி எனும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை.இளைஞர்களே இப்பொழுதே டீக்கடை ,ஆப்பக்கடை என எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ளுங்கள்...


தாமரை மலர்கிறது
மார் 25, 2025 19:23

ஏ ஐ ஆரம்பிக்கும்போது பலரை வேலை இழக்க செய்யும். ஆனால் காலப்போக்கில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.


பெரிய குத்தூசி
மார் 25, 2025 19:06

IBM 2015 ம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் பிசினஸ் கிடைக்காமல் கலகலத்து 2015 லேயே 75000 நபர்களை வேலையை விட்டு தூக்கியது. IBM கம்பெனியின் அணைத்து சொந்த ப்ராடக்ட் ம் வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. இப்போ மிஞ்சி இருப்பது IBM லோகோ மட்டுமே. ஆதலால் எதிகாலத்தில் IT துறையை நம்பினோர் நிர்கதியாகிவிடுவீர்கள். IT வேலை என்பது தீபாவளி வெடிக்கடை சீசன் பிசினஸ் போன்றது.


अप्पावी
மார் 25, 2025 18:44

செயற்கை நுண்ணறிவு பூந்திருச்சு. நமக்கு பாதிப்பில்லை.


எவர்கிங்
மார் 25, 2025 18:37

நம்ம வூர் தகர உண்டியல்கள் இதற்கும் காரணம் மோடி என்று கூவுவாங்களே


Ramesh Sargam
மார் 25, 2025 18:27

இந்த காலத்தில் எந்த நேரத்தில் பணி போகும் என்று தெரியாது. ஆகையால் பணியில் இருக்கும்போதே, நன்றாக சம்பாதிக்கும்போதே அனாவசிய செலவுகளை தவிர்த்து எதிர்காலத்திற்காக சேர்த்துக்கொள்ளவேண்டும்.


Raj
மார் 25, 2025 18:13

ஐ. டி. துறையும் கோவிந்தா தான். பாவம் இதை வைத்து எத்தனை பேர் வங்கிக்கடன் வாங்கியிருப்பானோ.


Appa V
மார் 25, 2025 18:25

வங்கி கடன் வீட்டுக்கோ காருக்கோ தான் வாங்குவது வழக்கம் . கடுமையான போட்டிகளால் கம்பெனிகள் நடத்துவதே கஷ்டமான காரியம்


visu
மார் 25, 2025 19:02

ஐ டி துறையில் இப்ப ஊதியம் முன்பு அளவுக்கு இல்லை பணி பாதுகாப்பும் இல்லை ஊழியர்கள் சற்று புத்திசாலித்தனமாக சேமிப்பு பிற முதலீடுகளில் இறங்க வேண்டும் ஏன் என்றல் இவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை