உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வட கொரியா அதிபருடன் இன்னும் நட்புறவில் உள்ளேன்: டிரம்ப்

வட கொரியா அதிபருடன் இன்னும் நட்புறவில் உள்ளேன்: டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.நோட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே , அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இன்று அதிபர் அலுவலமான ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன் குறித்து எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்,முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன். வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நான் நல்ல நட்புறவில் உள்ளேன் என்றார்.அணு ஆயுத குறைப்பு குறித்து அவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வீர்களா என கேள்வி எழுப்பிய போது, வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே பிற நாடுகளிடமும் உள்ளது. இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். என கருதுகிறேன் என்றார்.இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை அதிகாரி கூறுகையில், டிரம்ப் கருத்துக்கள் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்த கொள்கையில் தனது முதல் பதவிக்காலத்தில் செய்தது போலவே, வட கொரியாவின் முழுமையான அணு ஆயுதக் குறைப்பைத் தொடருவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
மார் 14, 2025 23:24

என்ன இது?? நீர் யானைக்கு கோட்டு சூட்டு போட்ட மாதிரி இருக்கு


Appa V
மார் 15, 2025 02:07

டோப்பா எப்படி திராவிட மாடலில் இருக்கா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை