உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

நியூயார்க்: காசா பகுதியில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டி , ஐ.நா., பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபரிலிருந்து போர் நடந்து வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக, அங்கு உனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா., பொது சபையில் ஜோர்டான் வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது.இந்நிலையில் வரும் ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு 'காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 14 உறுப்பு நாடுகள் ஆதரவளித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிந்தனை
மார் 26, 2024 09:16

ஆஹா ஐநா எவ்வளவு மூளை உள்ள அமைப்புன்னு நமக்கு ரொம்ப தாமதமாக தான் தெரியுது


பேசும் தமிழன்
மார் 25, 2024 22:22

உங்கள் தீர்மானத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.... ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த..... பாலஸ்தீன மக்களுக்கு யார் பொறுப்பு???..... இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட போது.... இந்த மன்றம் எங்கே போனது.... தூங்கி கொண்டு இருந்ததா ????


மேலும் செய்திகள்