உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐநா தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு

பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐநா தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண வலியுறுத்தியும், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் இரு தனித்தனி நாடுகள் என்ற திட்டத்தை அமல் செய்ய வலியுறுத்தியும் ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது. மொத்தமாக இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்ததால், தீர்மானம் நிறைவேறியது.அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூகினியா, பராகுவே, டோங்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரகடனத்துக்கு எதிராக ஓட்டளித்துள்ளன. அதேநேரத்தில் 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளன.நியூயார்க்கில் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ஐ.நா. உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்குகின்றன. இந்த உச்சி மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். இதற்கிடையே, ''இனி ஒருபோதும் பாலஸ்தீனம் என்னும் நாடு அமையாது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
செப் 13, 2025 13:26

பாலஸ்தீனம் பகுதி இஸ்லாம் நாடுகள் ஆதரவு பெற்றது. அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு பெற்றது. UN உறுப்பினர்களில் 3 ல் 1 பங்கு இஸ்லாம் நாடுகள்.? மத அடிப்படையில் ஆதரவு தருவது அவர்கள் இலக்கு. ஒரு உறுப்பினருக்கு ஒரு ஓட்டு நடுநிலை தீர்மானிக்காது? பெரும்பான்மை எப்போதும் வலு பெற்று முடிவை தீர்மானிக்கும். வலுவற்றவர் வாக்கும் அதிகாரம் பெற வேண்டும். இதற்கு ஆதரவு எதிர்ப்பு வாக்கு ratio நிர்ணயிக்க வேண்டாமா? ஆக்கிரமிப்பு நில பரப்பில் தீவிரவாதம், சட்ட விரோதம் எப்போதும் இருக்கும். உலகில் ஒரு அடி நிலம் கூட ஆக்கிரமிக்க விட கூடாது.


V. SRINIVASAN
செப் 13, 2025 11:40

பாலஸ்தீனம் விரைவில் உருவாக வேண்டும் இஸ்ரேல் நெய்தேன்யாகு பாலஸ்தீனத்தில் கொன்று குவித்து கொண்டு இருக்கான் ஈவு இரக்கம் இல்லாதவன் நேற்று 65 பேர் கொன்றுவிட்டான் அவனும் இப்படித்தான் சாக வேண்டும் பெரியவர்கள் மற்றும் குழந்தை ஒருவரையும் விடாமல் கொலை செய்கிறான் ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது


Anand
செப் 13, 2025 11:33

போகாத ஊருக்கு வழியை தேடுகிறார்கள், ஆமா இந்த தீர்மானத்தை கொண்டுபோய் எந்த ஆற்றில் வீசுவார்கள்?


Haja Kuthubdeen
செப் 13, 2025 11:43

அமெரிக்கா என்ற பூதம் பாதுகாக்கும் போது உலகில் எவனும் அமெரிக்காவின் கள்ள குழந்தையை அடக்குவது நடக்குமா என்ன!!!


ஆரூர் ரங்
செப் 13, 2025 11:02

அமைதி மார்க்கத்துக்கும் அமைதிக்கும் என்ன சம்பந்தம்?


Haja Kuthubdeen
செப் 13, 2025 11:36

அதானே ...இஸ்ரேலுக்கும் உமக்கும் என்ன தொடர்போ???


Haja Kuthubdeen
செப் 13, 2025 11:40

நீரே ஒரு மதத்தின் தீவிரவாதி..இதில் மற்ற மதக்காரனிடம் கேள்வியா...


nisar ahmad
செப் 13, 2025 10:26

இப்போது தெறிந்திருக்கும் அமைதியை விரும்பாத தீவிரவாதிகள் யாரென்று.


அப்பாவி
செப் 13, 2025 09:28

பலே... போன தடவை வரை ஓட்டெடுப்பின் போது டீ குடிக்க வெளியே போனவங்க. இப்போ ஆதரவு ஓட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை