உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 72 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 72 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2023 முதல் தரை, கடல் மற்றும் வான் வழித்தாக்குல் மோதல் வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் அதில் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என இரு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து மீண்டும் போர் துவங்கி நடந்து வருகிறது.இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 174 பேர் காயமடைந்துள்ளனர்.இதன் மூலம் போர் துவங்கியதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,331 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,632 ஆகவும் அதிகரித்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nisar ahmad
ஜூன் 28, 2025 17:01

டிரம்ப் வந்தது பத்து நாள் ஒதுங்கிருந்தால் ஈரான் இஸ்ரேல் என்று ஒரு இடம் இருந்தது என்று வரலாறு சொல்லியிருக்கும். இஸ்ரேலை அழிய வேண்டும்


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 27, 2025 21:08

மிருகக் குணம் கொண்ட காட்டுமிராண்டி கூட்டத்தை கொல்லும் இஸ்ரேலுக்கு இறைவன் துணை நிற்கட்டும். வாழ்த்துகள் இஸ்ரேல் go ahead.


Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:11

காட்டில் உள்ள மிருகங்கள் கூட இப்படி அடித்துக்கொண்டு சாவதில்லை. ஏன் இந்த மனித மிருகங்கள் இப்படி ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாகிறார்களோ இறைவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை