உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி: புடின் உறுதி

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி: புடின் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: '' உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது,'' என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புடின் பேசியதாவது: இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தியாவின் 150 கோடி மக்கள், மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை விட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாசாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக இப்பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது.அனைத்து திசைகளில் இருந்தும் இந்தியா உடன் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா மிகச்சிறந்த நாடு. 150 கோடி மக்கள் தொகையுடன், ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்கள் அங்கு பிறக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு புடின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 09, 2024 11:21

சமீபத்தில் தாய்லாந்து போனபோது hotel reception ல் காத்திருக்க நேர்ந்தது.. அப்போது ஒரு ரஷ்யர் என்னிடம் இந்தியரா என்றார்.... ஆம் என்றவுடன் மகிழ்ச்சியாக இந்தியா வை பற்றி விசாரித்தார் பின்னர் ஒரு ரஷ்ய நாணயத்தை நினைவு பரிசாக தந்தார்.... எனக்கும் ரஷ்யாவை பிடிக்கும் என்றேன்... எதனால் என்றார் நானோ.. லெனின் ஸ்டாலின் என்று பட்டியலிட்டேன்.. அவரின் முகம் மாறியது... சட்டென்று தான் கொடுத்த நாணயத்தை திரும்ப வாங்கி எழுந்து போயேவிட்டார்


karthik
நவ 09, 2024 08:47

உங்களுக்கு தெரியுது.. ஆனால் உள்நாட்டில் இருக்கும் தேச துரோகிகளுக்கு தெரியவில்லையே


SUBBU,MADURAI
நவ 09, 2024 11:45

Russia's endorsement of India as a potential superpower highlights the growing geopolitical shift and the increasing importance of India on the global stage. This statement, made by Russian President, underscores India's significant economic, military, and diplomatic role in international affairs.


சுந்தர்
நவ 09, 2024 01:46

நண்பேன்டா


venkatesan
நவ 09, 2024 00:04

Correct


venkat venkatesh
நவ 09, 2024 00:03

Correct


RAJ
நவ 08, 2024 22:06

புடின் இந்தியாவின் சிறந்த நண்பர்.. வாழ்க புடின்..


A P
நவ 08, 2024 21:52

வேறு ஒரு பெரிய நாட்டின் தலைவரின் கூற்றான இதனை ஒரு திராவிட கொத்தடிமை கூட ஏற்றுக்கொள்ள மாட்டாரே


சமூக நல விருப்பி
நவ 08, 2024 20:54

நன்றி புடின் அவர்களே நீங்கள் எந்த அளவு இந்தியாவை பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். எப்படி இந்தியா பற்றி செய்திகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மதிக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது நீங்கள் உயர்ந்து காணப்படுகிறீர்கள். . மோடிஜி உங்களை மட்டும் அல்ல உலக தலைவர்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் நேசிக்கிறார். ஜெயஹிந்த்


Palanisamy Sekar
நவ 08, 2024 20:43

மோடியின் சிறப்பான ஊழலே இல்லாத அரசின் செயல்பாடுகளால் இப்போது புடின் போன்றோர் போற்றுகின்றார் இந்தியாவையும்.அதன் தலைவர் மோடிஜியையும். பெருமையாக சொல்வோம் இந்தியன் என்று


Ramesh Sargam
நவ 08, 2024 20:36

அப்படி இடம் பெற்றாலும், இந்தியா உலக அமைதிக்காகத்தான் பாடுபடும். ஒரு சில நாடுகள் போல எல்லா நாட்டு தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை அனாவசியமாக நுழைக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை