உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உண்டு; ஆபரேஷன் சிந்தூருக்கு பிரிட்டன் எம்.பி., ஆதரவு

இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உண்டு; ஆபரேஷன் சிந்தூருக்கு பிரிட்டன் எம்.பி., ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து உரிமைகளும் உண்டு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று இந்திய வம்சாவளி எம்.பி., ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பார்லிமென்டில் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து ப்ரீத்தி படேல் பேசியதாவது; பாகிஸ்தானில் இருந்து செயல்படும் குழுக்களால் ஏற்படும் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மும்பை, டில்லி ஆகிய இந்திய நகரங்களின் பட்டியலில் பஹல்காமும் சேர்ந்து விட்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க விரும்புகிறோம். அடுத்தடுத்த ராணுவ குவிப்பை தவிர்க்க நினைக்கிறோம். ஆனால், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து உரிமைகளும் உண்டு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியா மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த நாடு பாகிஸ்தான். நீண்ட காலமாக இந்தியா மீது பயங்கரவாத வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், இங்கிலாந்து, இந்தியாவுடன் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்க நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
மே 08, 2025 20:16

இனிமே எங்க கொடி பறக்கும்.


PALANIAPPAN
மே 08, 2025 17:21

பயங்கரவாதத்தை வளர்க்க நீங்களும் ஒரு காரணம் என்று பாகிஸ்தான் சொல்வதற்கு உங்கள் பதில் என்ன


Srinivasan Krishnamoorthy
மே 08, 2025 20:14

she is an MP supporting Bharaths anti terrorism actions. How she can be responsible for previous British even current British government governments who were soft with Islamic terrorism for vote bank politics.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை