உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்கதான் இதிலும் "டாப்" - புலம் பெயர்ந்தவர்களில் இந்தியா முதலிடம்

நாங்கதான் இதிலும் "டாப்" - புலம் பெயர்ந்தவர்களில் இந்தியா முதலிடம்

ஐ.நா.,; உலக அளவில் வாழும் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களில் அதிகம் இந்தியர்களே என்ற நிலையை எட்டியுள்ளனர். உலக அளவில் 2020 வரை புலம்பெயர்ந்தோர் கணக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட விவர அறிக்கை ஒன்றை ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ளது. இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வின்படி, கூறப்பட்டுள்ளதாவது: 2000ல் எடுக்கப்பட்ட ஆய்வின் கணக்கெடுப்பின் படி இந்தியா ஒன்னே முக்கால் மடங்கு புலம்பெயர்வில் முன்னேறி உள்ளது. உலகளவில் அதிகமான மக்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களில் எந்த நாட்டவரும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் (ஒண்ணே முக்கால் கோடி) பேர் வெளிநாட்டில் வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தப்படியாக மெக்ஸிகோ மற்றும் ரஷ்யா நாடுகள் 2வது, 3வது இடத்தில் உள்ளன. அந்நாடுகளில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் முறையே 11.2 மில்லியன் (1.12 கோடி) மற்றும் 10.8 மில்லியன் (1.08 கோடி) பேர் உள்ளனர். கடந்த 2000ல் 7.9 மில்லியன் (79 லட்சம்) பேர்களுடன் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.2000 முதல் 2020 க்குள் மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவை இந்தியா முந்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நம்பமுடியாத அளவிற்கு 10 மில்லியன் ( ஒரு கோடி பேர் ) இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தோர் பட்டியலில் உயர்ந்துள்ளனர்.கடந்த 2000ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 173 மில்லியன் (17. 3 கோடி) மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். 2020 கணக்கெடுப்பின்படி 281 மில்லியன் (28.1 கோடி பேர்) உலக மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Govindaraju
செப் 27, 2024 08:28

நம்ம பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதாக, மோடிக்கு வெளி நாட்டில் பாராட்டு பத்திரம் படிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்ப வந்து மோடி அவர்களது நல்லாட்சியில் இந்தியா பெற்றுள்ள சாதனைகளில் பங்கு கொள்ளலாமே.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 27, 2024 00:22

வாழத் தகுதியற்ற நாடாக இருப்பதால் தான் மக்கள் புலம்பெயர்ந்து ஓடுகிறார்கள் என்பதை அறிந்தும் வெக்கமே இல்லாம மெடல் குத்திக் கொள்ளும் அறிவின்மை


Sugumar Kamu R
செப் 26, 2024 20:34

Even after 100 years our country will remain same and outgoing work force will increase manifold.


G Mahalingam
செப் 26, 2024 19:31

தகுதிக்கு இந்தியாவில் வேலை இல்லை. இட ஒதுக்கீடுகள் மூலம்தான் வேலை. அதுதான் காரணம்.


Narayanan Muthu
செப் 26, 2024 20:12

நீங்கள் கூறும் இடஒதுக்கீடு அந்த EWS இட ஒதுக்கீடு தான.


V RAMASWAMY
செப் 26, 2024 19:05

Thanks to IT sector and hard and intelligent performance of Indian workforce and thanks to incongenial situation at home, they prefer to fly abroad and settle in a trouble-free country. If conditions at home are made to be alike as in other developed countries, who will prefer to move away?


Easwar Kamal
செப் 26, 2024 17:28

இதுல என்ன பெருமை பட வெடி இருக்கிறது. ஒரு நாட்டில் இருந்து மற்றோரோரு நாட்டுக்கு குடி பெயர்கிரர் என்றல் அந்த நாட்டில் தங்கள் வளர்ச்சி தடை படுகிறது. அடுத்த கட்டத்துக்கு செல்ல வலி இல்லை அதனால் குடி payragirgal. மற்ற நாட்டில் சிறப்பாக உள்ளதால் மக்கள் அங்கேயே இருக்கிறார்கள்.


Narayanan Muthu
செப் 26, 2024 20:15

//ஒரு நாட்டில் இருந்து மற்றோரோரு நாட்டுக்கு குடி பெயர்கிரர் என்றல் அந்த நாட்டில் தங்கள் வளர்ச்சி தடை படுகிறது. // மேய்க்கிறது எருமை. இதில் பெருமையை பாரு கதைதான்


Jay
செப் 26, 2024 17:21

இங்கு படித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தாங்களும் உயர்ந்து, இந்த சமுதாயத்தையும் உயர்த்தும் நிலையில் இருக்கும் திறமையானவர்களை எல்லாம் வெளிநாடு கவர்ந்து கொள்கிறது. இது ஒரு வேதனையான புள்ளி விவரம்.


narayanansagmailcom
செப் 26, 2024 16:08

இதிகிருந்து புரிவது என்ன இந்தியர்களை பார்த்து செலக்ட் செய்வது அவர்களுடைய திறமை பார்த்து.


R Gokul
செப் 26, 2024 15:25

புலம் பெயருங்கள் , உங்களை பெற்ற தாய் தந்தையர் தான் பாவம்


Tiruchanur
செப் 26, 2024 14:44

எல்லா நாடுகளிலும் நம் ஹிந்துக்கள் சென்று அங்கே வசித்து, ரிஷி ஸுணக் போல அந்த நாட்டை ஆளவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை