உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு: அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை 'முக்கிய கூட்டாளி' நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிவித்துள்ளது.2025 - 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது.இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது: உலக பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அதனால், இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது, அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அங்கமாக உள்ளது.இந்தியாவின் வளர்ச்சியையும், தொழில்நுட்ப திறன்களையும், மிகச்சிறந்த சக்தியாக அமெரிக்கா மதிப்பிடுகிறது. இந்தோ - பசுபிக் பகுதியில் சீனாவின் விரிவாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது, அந்த பகுதியின் பாதுகாப்பு அமைப்பில் முக்கியத் தூணாக இருக்கும்.

பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு:

ராணுவப் பயிற்சிகள், கடல் பாதுகாப்பு கண்காணிப்பு, புதிய தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்புக் கருவிகள் மேம்பாடும் அதிகரிக்க உள்ளன.ஆயுதத் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா கூட்டணி பலமாக மாற உள்ளது. எதிர்கால பாதுகாப்பு சவால்களை சமாளிக்க, இணைந்த செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gnana Subramani
டிச 06, 2025 08:01

எந்த வரியையும் குறைக்க வில்லை


Gopal
டிச 06, 2025 07:55

அப்படி கதற வைக்கணும்.


மணியன்
டிச 06, 2025 07:53

அமெரிக்க இப்படி சொன்னா ஏதாவது கேடு செய்வதற்கு வாய்ப்பு.பாகிஸ்தானையும்,பங்களாதேஷையும் தூண்டி நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இவ்வாறு அறிக்கை விடுபவன் நம்பலாமா.


அருண் பிரகாஷ் மதுரை
டிச 06, 2025 07:53

இந்தியாவின் நம்பிக்கையான கூட்டாளி ரஷ்யா மட்டுமே.நீங்கள் முதுகில் குத்தும் துரோகி..பாகிஸ்தான் எதிரி ஆனதற்கும் அந்த பகை தொடர்வதற்கும் காரணம் உங்கள் துரோகமே.. உங்கள் ஆயுத விற்பனைக்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை தீயை மூட்டி அதில் குளிர் காயும் வேலை செய்கிறீர்கள்..


Barakat Ali
டிச 06, 2025 07:47

இந்திய ரஷ்ய உறவு வலுப்பெற்றதால் ஷாக் ????


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 06, 2025 07:29

இப்போ ராவுள் என்ன சொல்லுவாரு? முன்னாடி மெலனி நேத்து புதின் இன்னைக்கு டிரம்ப் ஐயோ எரியுதே


naranam
டிச 06, 2025 07:58

இப்பவும் ராஹூல் என்ன செய்வார்?,பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இப்படி உலக நாடுகள் மதிக்கும் சக்தியாக மாறி வருகிறதே என்று மிகவும் வருத்தப்படுவார். மோடியின் ராஜதந்திரம் தனக்கு இல்லையே என்று ஓலமிடுவார். இந்தியாவிலிருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவைப் பற்றி தப்பு தப்பாக மட்டமாகப் பேசுவார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை