உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மீது வரி தேவைதான்! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் பிடிவாதம்

உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மீது வரி தேவைதான்! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் பிடிவாதம்

வாஷிங்டன் : 'உக்ரைனில் போரை நிறுத்துவதற்காகவே, இந்தியாவுக்கு வரி விதிக்கும் தேவை ஏற்பட்டது' என, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம், கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு இரண்டு காரணங்களுக்காக 50 சதவீத வரி விதித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, தங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதில்லை. இதனால் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது என்று முதல் காரணம் கூறப்பட்டது. இரண்டாவதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த நிதியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடனான போரை ரஷ்யா நீட்டித்து வருகிறது என டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த இரண்டாவது காரணத்துக்காக, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. கூடுதல் வரியும் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்ல, இந்திய தயாரிப்புகளை நம்பி தொழில் செய்யும் ஏராளமான அமெரிக்க தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'வரி விதிப்பு உத்தரவுகள் அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறியவை' என்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, 'பெடரல் சர்க்யூட்' எனப்படும் சிறப்பு நீதிமன்றத்தை டிரம்ப் அரசு நாடியது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அக்., 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, டிரம்ப் அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில், 251 பக்க மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அமெரிக்காவில் தேசிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பல லட்சம் கோடி ரூபாயை நாம் செலவு செய்கிறோம். எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்காக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரங்கள் சட்டப்படி அதிபர் டிரம்ப் வரி விதித்தார். இந்த வரி விதித்ததன் முக்கிய நோக்கம், உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதாகும். இந்த வழக்கு அமெரிக்காவின் நலனுக்கு மிகவும் முக்கியமானது. வரி விதிக்கும் அதிகாரத்தை மறுத்தால், அமெரிக்கா பாதுகாப்பு இல்லாமல் வர்த்தக பதிலடிக்கு ஆளாகும். இதனால் நாடு பொருளாதார அழிவின் விளிம்புக்கு தள்ளப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோபமடைந்த அதிபர் டிரம்ப்

உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷ்யா மீது நடவடிக்கை இல்லை. இந்தியாவுக்கு மட்டும் வரி விதிப்பு ஏன் என செய்தியாளர் ஒருவர் நேற்று அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபமடைந்த டிரம்ப், “இந்தியாவுக்கு வரி விதித்ததே ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை தான். இதனால் அவர்கள் பல ஆயிரம் கோடி டாலர்களை இழப்பார்கள். இதை ரஷ்யா மீதான நடவடிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், செய்தியாளர் வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை தேடுங்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ManiMurugan Murugan
செப் 05, 2025 23:38

அமெரிக்கா வில் அவசர நிலைக்கு காரணம் உக்ரைனுக்கு ஆயுதம் கொடுப்பது என்றால் அதை நிறுத்தாமல் அவசரநிலை என்று ஒரு அதிபர் கூறுவது வேடிக்கையே


Yaro Oruvan
செப் 05, 2025 22:02

ஹலோ மிஸ்டர் டொனால்ட் டக் ...உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டாதே உங்களால் தானே ??? அவனுவ செவனேன்னு இருந்தானுவ.. நீங்கதான் அவனுகளை நேட்டோவுல ஏத்தி ஏத்தி விட்டு இப்போ சண்டைய நிறுத்துறாராம் BUTTER...


Chandhra Mouleeswaran MK
செப் 05, 2025 13:53

ட்ரம்பெட்டிற்கு மூதாதையர் வழி ஜெர்மனி மற்றும் ஸ்காட்லண்ட் இல் இருந்து வருகிறது அதுதான் "நான் ஒரு கிங் மற்ற எல்லாரையும் ஆளும் திறன் பெற்ற தலைவன் மற்ற எல்லாரும் எனக்குச் சேவகம் செய்ய வேண்டிய அடிமைகள்" எனும் ஹிட்லர் மனோபாவம் இப்படி சர்வாதிகாரம் இந்த ட்ரபெட்டிற்கு மிகவும் பிடித்த அரசியல் அமைப்பு


Anand
செப் 05, 2025 13:46

மாதம் ஒரு போரை நிறுத்தும் இவர் இந்த மாதம் எந்த போரை நிறுத்தப்போகிறாரோ?


வாய்மையே வெல்லும்
செப் 05, 2025 12:35

எனக்கு பெரிய டவுட்டு.. அமெரிக்கா அதிபர் இப்படி உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதம் பிடிக்க ஐடியா கொடுத்தவர் .. வேரு யாரு நம்மாள் பப்பு தான்.. இப்படிசொல்லிப்பாரு .. உச்சநீதிமன்றமே உன்னை போற்றும் யென்றிருப்பார் ராவுல்.. சற்றும் யோசிக்காமல் கிண்கிணிமங்கினி டிரம்ப் அதை ஆமோதித்து அப்படியே உச்சநீதிமன்றத்தில் வாதாடி இருப்பார் . உலகமே இப்போ சிரிப்பா சிரிக்குது.. இவிங்க ரவுஸை பார்த்து ஹாஹாஹா


Barakat Ali
செப் 05, 2025 12:18

பாகிஸ்தான் மாதிரி இல்லாம, அதே சமயம் இந்தியா போலவே, அங்கே உச்சமன்றம், அரசு எடுக்கும் முடிவுகள் குறித்து கேள்வி கேட்க முடியுது ....... இதுவே பெரிய விஷயம் .....


M Ramachandran
செப் 05, 2025 12:15

முந்நீர் முஹம்மதுவின் சேர்க்கையால் வந்த கூமுட்டைகாரனின் பதிலால் வினை.அறுவடை செய்வது அமெரிக்கா மக்கள்.


HoneyBee
செப் 05, 2025 13:26

சீக்கிரம் அழிந்து விடும் அந்த நாடு. அங்க ஒரு புரட்சி ஏற்பட்டு பதவியை இழப்பார் அந்த டிரம்ப். கனடா பிரதமர் நிலை தான் வரும் அந்த கூட்டத்துக்கு


M Ramachandran
செப் 05, 2025 12:08

அங்கேயும் ஒரு விடியல் ...


vee srikanth
செப் 05, 2025 13:09

அதுக்குதான் அனிலாரின் தம்பி அமெரிக்கா போகண்ணுனு சொன்னார்


M Ramachandran
செப் 05, 2025 12:06

முன்னேரிய நாடு என்று பீத்திக்கொள்ளும் ஒரு நாட்டின் மக்களின் தலைவனாக பேசால் ஒரு 3 க்ளாஸ் பள்ளி மாணவன் போல் அவன் அடிச்சிட்டான் சார் என்று கூறுவது போல. என்ன செய்வது அடி அப்படி மூளையை கலக்கிடிச்சி.


Rajasekar Jayaraman
செப் 05, 2025 11:37

அமெரிக்க கோர்ட் சொல்ல வேண்டும்


புதிய வீடியோ