உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்

இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்திய எல்லையோர நகரங்களில் குடியிருப்புகள், மத வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் தொடர்ந்து தாக்க முயற்சிக்கிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில், சீன அரசின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:இந்த விவகாரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த மோதல், மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக்குவதை கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் பிரச்னையை பெரிதாக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியம். சர்வதேச நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது. இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராமகிருஷ்ணன்
மே 10, 2025 17:22

பஞ்சாயத்து செய்ய வருபவர்கள், தாக்குதல் நடத்தியவர்களை எப்படி தண்டிக்கும், இனிமேல் பாக்கிஸ்தானில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் வளர்ப்பதை எப்படி தடுப்பார்கள்.. பாக்கிஸ்தானில் சர்வதேச கண்காணிப்பு குழு அமைக்குமா? இதற்கு பதில் அளித்து விட்டு இந்தியாவை அழைக்க வேண்டும்


karthikeyan
மே 10, 2025 15:26

டேய் பாகிஸ்தான், என்கிட்ட நீ ஆயுதம் வாங்கு, ஆனா அதைவைத்து சண்டை போடதாடா ...... தயவு செய்து போரை நிறுத்து..


Kasimani Baskaran
மே 10, 2025 14:18

எங்கள் ஆயுத வியாபாரதில் கை வைக்காதீர்கள் - வேண்டுமானால் அக்சய் சின்னை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூட சொல்ல வாய்ப்பு இருக்கிறது. சீன வான்பாதுக்காப்பு என்பது டப்பா என்பதை இந்தியா நிரூபித்து விட்டது. அணுவாயுத தொழில் நுணுக்கம் என்று கடலை மிட்டாயை விற்று சீனா ஏப்பம் விட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தனக்கு அருகில் இருக்கும் ஒரு நாட்டுக்கு அணுவாயுதத்தை கொடுத்து எதிரியை உருவாக்க வாய்ப்பே இல்லை. ஆகவே பாகிஸ்தான் வைத்திருக்கும் சீன அணுகுண்டு என்பது வெறும் கடலை உருண்டை மட்டுமே.


Madras Madra
மே 10, 2025 14:02

அய்யொ நல்லவன் வாரான் சொம்பை எடுத்து உள்ள வைங்கோ


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 13:44

முதல்ல தீவிரவாதத்தை நிறுத்தும்படி பாகிஸ்தானிடம் சொல்லுங்க பார்ப்போம் .....


Kumar Kumzi
மே 10, 2025 13:19

சப்பட்ட மூக்கு சகுனியை ஒருநாளும் நம்ப கூடாது


India our pride
மே 10, 2025 12:22

சீனனையும் அமெரிக்கா காமெடியனையும் கொஞ்சம் கூட நம்ப கூடாது. சீனன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதாக முதுகில் குத்துவான். அமெரிக்க டிரம்ப், இந்த போரில் தனது லாபத்தை பெருக்க குறுக்கு வழி தேடுவான். இந்த போரில் நமது கையே நமக்கு உதவி என்பதை நிரூபிக்கறது.


Palanisamy T
மே 10, 2025 12:20

இந்த இரண்டு நாடுகளையும் எந்தச் சூழ்நிலைகளிலும் இனிமேல் நம்ப வேண்டாம். இன்றைக்கு இது தற்காலிக அமைதியை ஏற்படுத்தலாம். நாளை இந்த அமைதிநிலை இன்னும் மிக மோசமாக மாறலாம். முதல்வல்லரசு நாடான அமெரிக்காவிடம் மாறாதவர்கள் சீன அரசு, இனி என்றும் மாறமாட்டார்கள் . தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் பதுங்கு குதிகள். பூமிக்கு அடியில் பாதைகள் அமைத்து இந்திய நாட்டிற்குள் திருட்டு தனமாக ஊடுருவியது பாகிஸ்தானுக்கு தெரியாதா? இவர்களின் கட்டுப்ப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி இவர்களிடமிருக்கும் போது அது எங்களுக்கு தெரியாதென்று சொல்வதெல்லாம் மூடிமறைப்பதெல்லாம் என்றும் ஏமாற்றுவேலை.


veeramani hariharan
மே 10, 2025 12:19

China is desperate to stop the war as their products efficiency is exposed like anything. Now all their orders will be revised. Also, it is good for us to get more orders from South Asian countries , African countries.


V K
மே 10, 2025 12:06

வா யா வா யா சீனா பட்டாசுக்கு சிவகாசி பட்டாசு பரவாயில்லையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை