உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதற்றத்தை குறைத்து உறவை மேம்படுத்த 4 திட்டங்கள்: சீனாவிடம் ராஜ்நாத் யோசனை

பதற்றத்தை குறைத்து உறவை மேம்படுத்த 4 திட்டங்கள்: சீனாவிடம் ராஜ்நாத் யோசனை

பீஜிங்: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்த நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் பதற்றத்தை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாக 4 திட்டங்களை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.இந்த மாநாட்டுக்கு இடையே, சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். அப்போது, பீஹாரின் மதுபானி ஓவியத்தை பரிசாக ராஜ்நாத் வழங்கினார். மேலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் குறித்த பிரச்னையை கிளப்பினார். இதற்கு பதிலடியாக இந்தியாவின், 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பற்றியும் எடுத்துரைத்தார்.இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளில் எல்லையில் பதற்றத்தை குறைத்து அமைதி நிலவவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை ராஜ்நாத் விளக்கினார்.அதன்படி,1. 2024 ல் ஒப்புக் கொள்ளப்பட்ட படைகுறைப்பு திட்டத்தை பின்பற்றுதல்2. பதற்றத்தை குறைப்பதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்தல்3. எல்லை வரையறை இலக்கை அடைவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துதல்4. கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை தயாரிக்க சிறப்பு பிரதிநிதிகளை பயன்படுத்துதல் ஆகிய திட்டங்களை எடுததுரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சந்திப்பு தொடர்பாக ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு இடையே சீன பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜூனை சந்தித்தேன். இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டோம். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை துவக்குவதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். இரு தரப்பு உறவில் புதிய சிக்கல்களை தவிர்ப்பதுடன், நேர்மறையான தருணத்தை பராமரிப்பது இரு தரப்புக்கும் முக்கியம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thirumoorthy
ஜூன் 28, 2025 07:55

சீனா திருந்த வேண்டும் தெற்காசியாவில் தவிர்க்க முடியாத சக்தியாக நம் நாடு இந்தியா வளர்ந்து நிற்கிறது நம் நாட்டுடன் சுமுகமான உறவை பேண வேண்டும் அதை விடுத்து தீவிரவாதத்தை வளர்த்து விடும் நாட்டுடன் உறவை பேணுகிறது நாட்டுடன் உறவு கொண்டுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது நம்மை பகைத்தால் சீனாவிற்கு இப்போது நல்லதல்ல சீனா திருந்த வேண்டும் புதிய இந்தியா எந்த சவால்களையும் எதிர் கொள்ளும் புதிய இந்தியா என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:37

சீனா, இப்பொழுதாவது இந்தியாவின் மாறுதலை நன்றாக புரிந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன். மாறுதல், அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இந்தியா, இப்பொழுது மோடி தலைமையில் உள்ள இந்தியா. இனியாவது சீனா பழைய எண்ணத்தில் இந்தியாவை புறக்கணிக்கக்கூடாது. ஒழுங்குமுறையாக இந்தியாவை மதித்து, இரு நாடுகளுக்குமிடையே உள்ள நலிந்துபோன உறவை மேம்படுத்த சீனா முன்வரவேண்டும்.


Yasararafath
ஜூன் 27, 2025 20:04

ராஜ்நாத்சிங் ஏன் சீனாவிடம் உறவை மேம்படுத்த வேண்டும் இந்தியா


ஷாலினி
ஜூன் 27, 2025 17:11

சீனா ஏற்குமா என்பதை பார்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை