உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா: அமெரிக்கா அபாண்டம்

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா: அமெரிக்கா அபாண்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட, 23 நாடுகளை அமெரிக்க பார்லிமென்டில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பட்டியலிட்டுள்ளார்.நம் நாட்டுடன் நட்புறவுடன் இருப்பது போன்ற நடவடிக்கைகளை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு பக்கம் மேற்கொள்கிறார். மறுகணமே, சட்டவிரோதமாக போதைப் பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்து, நம் நாட்டின் மீது அபாண்டமாக பழி சுமத்தி உள்ளார். அமெரிக்க பார்லிமென்டில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின்போது, சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். இப்பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட 23 நாடுகளின் பெயர் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகள், சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் முன்னோடி ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அல்லது செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
செப் 19, 2025 13:35

What is Trump’s actual problem, why always targeting India, I asked Mrs.Trump. he replied even he doesn’t know


Kasimani Baskaran
செப் 19, 2025 03:42

உண்மையான லிஸ்ட். தமிழகத்தில் புழங்கும் போதைப்பொருள் சரித்திரம் காணாதது. இது ஒன்றை வைத்தே மாநில அரசை டிஸ்மிஸ் செய்யலாம்.


Vasan
செப் 19, 2025 03:26

மனதைத்தொட்டு சொல்லுங்கள். டிரம்ப் கூறுவது உண்மை தானே. தமிழ்நாட்டால் இந்தியாவின் பெயர் கெடுகிறது.


Ramesh Sargam
செப் 19, 2025 01:42

இந்தியாவை அவமானப்படுத்தவே இப்படி எல்லாம் செய்கிறார் இந்த ட்ரம்ப். மோடி அவர்கள் டிரம்புக்கு ஒரு சரியான பாடம் புகட்டவேண்டும்.


Jagan (Proud Sangi )
செப் 19, 2025 01:03

Fentanyl -ஒரு மருந்து பொருள், இந்திய அமெரிக்காவிற்கு அதிக அளவில் மருத்துவ பொருள் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவில் இந்த மருந்தை போதைக்காக பயன் படுத்தினால் நாம் என்ன செய்ய முடியும்? சும்மா இப்போ நடக்கும் வர்த்தக பேரத்தில் இதை ஒரு பகடுகாயக பயன் படுத்த இப்படி செய்கிறார்கள்


முக்கிய வீடியோ