உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி; மீண்டும் மிரட்டிப் பார்க்கிறார் டிரம்ப்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி; மீண்டும் மிரட்டிப் பார்க்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரிவிதிகளை விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை விதித்தார். இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அவரது மிரட்டல்களை மத்திய அரசு பொருட்படுத்துவது இல்லை. இந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அது தொடரும் என்று மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

பேசும் தமிழன்
அக் 21, 2025 20:03

உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்... உன்னுடைய மிரட்டலுக்கு பயப்பட இது ஒன்றும் முந்தைய கான் கிராஸ் கட்சி ஆட்சி அல்ல.... திரு மோடி அவர்கள் தலைமையிலான பிஜெபி கட்சி ஆட்சி.... இங்கே உங்கள் மிரட்டல் வேலைக்கு ஆகாது..... போய் உங்கள் வேலையை பாருங்கள்.


Nathan
அக் 21, 2025 04:57

உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்கி பயன் படுத்துங்கள் இல்லை என்றால் உங்களுக்கு எங்கே இருந்து வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ வாங்கி கொள்ளுங்கள் வரி செலுத்த நாங்கள் அமெரிக்க குடிமக்கள் அல்ல


ramesh
அக் 21, 2025 03:52

இந்த கொசு தொல்லை தாங்க முடியல


sankaranarayanan
அக் 20, 2025 21:17

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை தவிர வேறு பொருட்களை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரிவிதிப்பாரா மாட்டாரே ஏனென்றால் அமெரிக்காவே வேறு பொருட்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கிக்கொண்டேதான் இருக்களிறது


ஜெய்ஹிந்த்புரம்
அக் 20, 2025 21:01

மிரட்டல் இல்லை. தனக்கு அதிகாரம் இருக்கும்பட்சத்தில், பைத்தியக்காரத்தனமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதையில் இருக்கும் போது இப்படித்தான் நடக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்களே, அது போலத்தான்


தாமரை மலர்கிறது
அக் 20, 2025 20:57

முடிஞ்சத பாத்துக்கோ. பிஜேபி அரசு ஒருபோதும் அடிபணியாது.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 20, 2025 20:55

தீபாவளி தள்ளுபடி, ஒரு வரி போட்டா, இன்னொரு வரி இலவசம்


Chandra Sekar
அக் 21, 2025 07:02

இந்த drum க்கு திறமை இல்லை திறமை இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டால் நாடு தயிரா தான் போகும்


Subburamu K
அக் 20, 2025 20:18

Trump has already lost his significance in geopolitics. He is going to be the joker of the century All his misadventures completely spoiled the credibility of USA. He is destroying not only his country's economy but also world trade and peace. The worst President ever had in USA


சூர்யா
அக் 20, 2025 18:49

மறுபடியும் ஆரம்பத்லேர்ந்தா?


சூரியா
அக் 20, 2025 17:42

மக்கள் தொகை 144 கோடி உள்ள நாட்டை, வெறும் 44 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்கா மிரட்டுகிறது. நாம், நமது அமெரிக்க வர்த்தகம் முழுவதையும் நிறுத்த வேண்டும். இதே போல சைனாவும் செய்தால், அமெரிக்க மக்கள் toilet paper கூட இல்லாமல் நாறிக்கொண்டிருப்பார்கள்.


முக்கிய வீடியோ