உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக யூத் வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

உலக யூத் வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

வின்னிபெக்: உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றியது. கனடாவில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகள் பிரிவில் இந்தியாவின் மோகித் தாகர், தேவன்ஷ் சிங், யோகேஷ் ஜோஷி பைனலுக்கு முன்னேறியது. இதில் அமெரிக்காவை சந்தித்தது. இந்திய அணி, 224-222 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் குஷால் தலால், அபர் மிஹிர் நிதின், கணேஷ் மணிரத்னம் இடம் பெற்ற அணி பைனலுக்குள் நுழைந்தது. இதில் ஜெர்மனியை எதிர்கொண்டது. முதல் மூன்று செட் முடிவில் இந்தியா 175-176 என பின் தங்கியது. கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட போட்டி 233-233 என சமன் ஆனது. வெற்றியாள ரை முடிவு செய்ய நடந்த 'ஷூட் அப்பில்' அசத்திய இந்திய அணி, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiMurugan Murugan
ஆக 24, 2025 22:53

வாழ்த்துக்கள்


தியாகு
ஆக 24, 2025 07:13

தங்கம் வென்ற வீரர்களே, நீங்கள் வாங்கிய தங்கத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுககாரகள் யாருக்கும் தெரியாமல் நீங்கள் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி உங்களிடம் இருந்து அந்த தங்கத்தை ஆட்டையை போட்டுவிடுவார்கள்.


சமீபத்திய செய்தி