உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா

ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா

ஜெருசலம்: ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை, இந்தியாவிடம் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் ஒப்படைத்தால் மட்டுமே அனைத்தும் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜெ.பி. சிங் கூறி உள்ளார்.பஹல்காம் தாக்குதல், அதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி, பயங்கரவாத முகாம்கள் அழிப்பு என இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆபரேஷன் சிந்தூர் என்பதே இடைநிறுத்தமே, இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l27f4wfg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இஸ்ரேலுக்கான இந்திய தூதர், பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறி உள்ளார். இஸ்ரேலில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது; மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களை கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன்பு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டுள்ளனர். அதன் பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்காக போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம். நாங்கள் சிந்துநதி நீர் மூலம் தண்ணீரை பாய அனுமதித்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் பாய அனுமதிக்கிறது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது என்று இதைத்தான் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி உள்ளார்.பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர். ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும் போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
மே 20, 2025 20:49

அந்த ஹபீஸ் சையீத் ஐ இஸ்லாமிய முறையில் உயிரோடு தோலை உரித்து எடுத்து, அதில் வைக்கோல் அடைத்து மும்பை இந்தியா கேட் ல் தொங்க விட வேண்டும்.. காட்டுமிராண்டி பயல்கள் செய்த வெறித்தனம் எப்படி இருக்கும் என்பதை மூர்க்க கும்பலுக்கு பிராக்டிகல் ஆக காட்டிவிட வேண்டும்


Ramanathan RNN
மே 20, 2025 16:52

All the happenings happened now is the Will of God


K V Ramadoss
மே 20, 2025 16:19

பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக தண்ணீர் கொடுத்து உதவும் இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்பி இந்திய மக்களை கொலை செய்யும் பாகிஸ்தான் எவ்வளவு கொடூரமான நாடு


VSMani
மே 20, 2025 15:39

போர் நிறுத்தம் பண்ணுவதற்கு முன்பே தீவிரவாதிகளை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு என்று பாக்.கை நெருக்கி இருக்கலாம் என்பது பெரும்பான்மையினரின் ஏகோபித்த விருப்பமும் கருத்தும்


Barakat Ali
மே 20, 2025 13:34

மத்திய அரசின் அணுகுமுறையும் சரி ... ராணுவத்தின் அணுகுமுறையும் சரி .... கடுகளவும் தவறு காண முடியாதவை .....


SUBBU,MADURAI
மே 20, 2025 15:44

தாங்கள்தான் இந்த தேசத்தை நேசிக்கும் உண்மையான முஸ்லீம்.


A1Suresh
மே 20, 2025 13:08

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் - எனும் குறளை அப்படியே பயன்படுத்தும் மோடிஜிக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதிகளின் மொத்த-சில்லறை தொழில்துறை உற்பத்தி நிறுவனம் பாகிஸ்தான். அதுவும் அணுவாயுத பூச்சாண்டியை வைத்து இதுநாள் வரை பாரத ராணுவத்தை கட்டிப்போட்டு வந்தது. விஷப்பாம்பின் பல் பிடுங்கப் பெற்றது. இனி பாகிஸ்தான் ஒரு பெரிய சைஸ் புழு அவ்வளவே


Madras Madra
மே 20, 2025 12:54

இந்த வார்த்தைகள்


Vimal C
மே 20, 2025 12:28

இந்தியா எடுத்த முடிவு மிகப்பெரிய சாதனை சீக்ரம் வல்லரசாகும்


Vimal C
மே 20, 2025 12:24

சரியானமுடிவு சபாஸ்


ponssasi
மே 20, 2025 12:02

ஏறத்தாழ பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெரும்பகுதி இந்தியா வசம் வந்துவிட்டது. அதை அதிகார பூர்வமாக இந்தியா அறிவிக்கவில்லை, பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திய அரசு அமைதி காக்கிறது. பாகிஸ்தான் மக்களை காஷ்மீர் பிரச்னையில் இருந்து திசைதிருப்ப ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா, வெற்றி விழா என கொண்டாடுகிறது. பாகிஸ்தான் மக்களின் / அரசின் ஒரே குறி முழு காஷ்மீர் பகுதியும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை