உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

நியூயார்க்: 'நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்' என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:* அடுத்த ஆண்டு, இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவீதமாக வளர்ச்சியடையும்.* சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.* நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.* உலக அளவில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது.* மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.* சீனா 4.6 சதவீதமும், அமெரிக்கா 1.6 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவீதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவீதமும் மட்டுமே வளர்ச்சி அடையும்.* பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து, நடப்பாண்டில் 4.3 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6.2% ஆகவும், அடுத்த ஆண்டு 6.3% ஆகவும் வளரும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

A P
மே 17, 2025 07:22

கொள்ளை அடித்த திருட்டு மன்னர்கள், போகும்போது நமது கோவில்களின் மேல் மசூதிகளைக் கட்டி விட்டுச் சென்றது, இந்த மூளை அற்றவர்க்குத் தெரியலை போலும். ஒரு வேலை திருடர்களை இவர் ஆதரிக்கிறாரோ என்னவோ.


Sudhagar Ramaiah
மே 17, 2025 06:37

இல்லை நண்பரே. முற்றிலும் தவறான புரிதல். டாலர் உயர உயர இந்திய பொருளாதாரம் வளரும் தவிர, வீழ்ச்சி அடையாது. உதாரணத்துக்கு, ஒரு சைக்கிள் உற்பத்தி ஆகவேண்டும் என்றால் , இந்தியாவில் அது ஆயிரத்து ஐநூறு ருபாய். ஆனால், அமெரிக்காவில் அது ஆயிரத்து ஐநூறு டாலர்1500x80=120000. இதனால் , அமெரிக்காவால் உற்பத்தி செய்வதை விட, இந்தியாவில் உற்பத்தி செய்வது அதிகம். இதனால்தான், அமெரிக்காவின் அணைத்து உற்பத்தியும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்கிறார்கள். நமக்கு வேலைவாய்ப்பும் அதிகம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி அடைய அடைய , டாலர் விளைய இந்தியாவில் அதிகமாகுமே தவிர குறையாது. இந்திய சுதந்திரம் பெற்ற பொது, 1 டாலர் = 1 இந்திய ரூபாய். அப்பொழுது இந்திய ஏழை நாடு. இப்பொழுது 1 டாலர் = 80 இந்திய ருபாய் , இந்திய வல்லரசுக்கு இணையான நாடு.


சாமானியன்
மே 17, 2025 05:49

நல்ல விஷயம்தான். என்றாலும் ஒரு நெருடல். அமெரிக்காவின் ஒரு டாலரை வாங்க ஏன் ₹80 தர வேண்டும் ? அது குறைந்தால்தானே வளர்ச்சி. என்ன மக்களே! நான் சரியா சொல்றேனா ?


jana
மே 17, 2025 05:47

Yes, they are still looking for the temple under the mosque. Huge development!


ஆரூர் ரங்
மே 17, 2025 11:04

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பயிற்சி நிலையங்கள் மசூதி வடிவில் கட்டப்பட்டிருந்ததாக செய்தி. பயங்கரவாதத்தின் பின்புலமாக இருந்தால் அன்னிய மூர்க்கங்கள் தேவையற்றவை.


மீனவ நண்பன்
மே 17, 2025 03:48

சீனாவும் பாகிஸ்தானும் இந்திய பொருளாதார வளர்ச்சியை விரும்பவில்லை


நிக்கோல்தாம்சன்
மே 17, 2025 01:47

சீனா அமெரிக்காவின் 4 சதவீதம் இந்தியா ஜெர்மனியின் 6 சதவீதமும் ஒன்றா ?


m.arunachalam
மே 17, 2025 01:24

அந்த வளர்ச்சியை தொடர்ச்சியாக செய்தால் நன்மையே. பெருமை தலையில் ஏறினால் நிலைமை மாறிவிடும் .


Nada Rajan
மே 16, 2025 22:47

பாரத் மாதா கீ ஜெய்... ஜெய்ஹிந்த்..