மேலும் செய்திகள்
தாயகம் திரும்பிய ஏழு பேர்
06-Sep-2024
தாயகம் திரும்பிய மீனவர்கள்
06-Sep-2024
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள தூதரக வளாகத்தில், செப்டம்பர் 18ம் தேதி இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூதரக அதிகாரியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. ஆழ்ந்த வருத்தத்துடன், இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் செப்டம்பர் 18ம் தேதி அன்று மாலை காலமானார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை. இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும், அவரது குடும்பத்துடன் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Sep-2024
06-Sep-2024