உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு; இரு தரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு; இரு தரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அண்மையில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்திருந்தார். டில்லியில் அமிர்கான் முட்டாகியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்திருந்தார். தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இருநாடுகளின் பரஸ்பர நலன் சாா்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது. ஆப்கானிஸ்தானின் விரிவான வளா்ச்சி, மனிதாபிமான உதவி உள்ளிட்டவற்றில் இந்தியாவின் பங்களிப்பை காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பின்...!

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு இந்தியா தூதரகங்களை மூடியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு மீண்டும் காபூலில் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி