உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி.,யில் இந்தியருக்கு சிறை

ஆஸி.,யில் இந்தியருக்கு சிறை

மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்தவர் சிவகுமார் சிதம்பரம், 40. கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், கடந்த 1995 ல் பணிக்கு சேர்ந்தார். கடந்தாண்டு அங்கு சிறுமிகள் மூன்று பேரிடம் அநாகரீகமாக நடந்ததாக, சிவகுமார் மீது போலீசார் வழக்கு பதிந்து<, அவரை கைது செய்தனர். விக்டோரியன் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில்,சிவகுமாருக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின்போது, ஒன்பது மாதங்களுக்கு மேலாக, இவர் சிறையில் இருந்து விட்டதால், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ