உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது

அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹூஸ்டன்: அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக பணியாற்றி வந்தவர் சந்திர நாகமல்லையா,50. இவருக்கும், அவரின் கீழ் பணியாற்றி வந்த கோபோஸ் -மார்டினெஸ்,37, என்பவருக்கும் பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழைய வாஷிங்மெஷினை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் நாகமல்லையாவை தலை துண்டித்து கொன்றுள்ளான் மார்டினெஸ். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி கோபோஸ் மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில், தன்னுடன் பேசுவதற்கு மொழி பெயர்ப்பாளரை நாகமல்லையா அணுகியதால், கோபம் ஏற்பட்டு கொலை செய்ததாக குற்றவாளி கூறியுள்ளான். மேலும், அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் ஹூஸ்டனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுப்பதாகவும், கொலையாளி டல்லாஸ் நகர போலீசாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raj
செப் 12, 2025 13:00

பேரு தான் அமெரிக்கா, கலவர நாடக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கி கலாசாரம், கொலை கொள்ளை, இதை கட்டுப்படுத்த டிரம்ப்பால் முடியவில்லை. கேவலம்.


canchi ravi
செப் 12, 2025 12:55

அமெரிக்காவில் இப்பேற்பட்ட கொலையா?


KOVAIKARAN
செப் 12, 2025 12:29

கோபோஸ் -மார்டினெஸ் என்பது, மெக்ஸிகன் பெயர். அங்கே அவர்கள் Spain -லிருந்து வந்தவர்கள் அதிகம் என்பதால், அங்கே ஸ்பானிஷ் தான் பிரதான மொழி. அவர்களுக்கு, ஆங்கிலம் ஓரளவு தான் வரும். நம்மூர் 200 ரூபாய் உபிஸ் போல. எனவே, அவர் பேசியது நமது இந்திய நண்பருக்கு புரிந்திருக்காது. எனவே, அந்த ஆத்திரத்தில், இவரைப் போட்டுத்தள்ளியிருக்கிறான். அமெரிக்காவில் குற்றம் புரிவதில், கறுப்பர்களுக்கு அடுத்து, மெக்ஸிகன் களே அதிகமாக உள்ளார்கள்.


Nathan
செப் 12, 2025 10:39

அமெரிக்கா சுய ஒழுக்கம் அற்ற மற்றவர்கள் சுதந்திரத்தை மதிக்கும் பண்பு அற்ற மனிதர்கள் நிரம்பிய நாடு. இந்தியர்கள் பணத்திற்காக இது போன்ற நாட்டில் படிக்கவும் வேலை செய்து சம்பாதிக்கவும் தங்களது உயிரை பணயம் வைத்து செல்கின்றனர். இது தேவையா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்தியா போன்ற மிகசிறந்த ஜனநாயக நாட்டில் இருந்து இது போன்ற நாட்டில் அச்சத்தில் வாழ அங்கு சென்று தான் ஆக வேண்டுமா


MP.K
செப் 12, 2025 09:11

கொடூரம் ஆட்டை வெட்டுவது போல வெட்டி உள்ளார்


சமீபத்திய செய்தி