உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  காலிஸ்தான் ஆதரவு ஓட்டெடுப்பில் இந்திய தேசிய கொடிக்கு அவமதிப்பு

 காலிஸ்தான் ஆதரவு ஓட்டெடுப்பில் இந்திய தேசிய கொடிக்கு அவமதிப்பு

ஒட்டாவா: கனடாவில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற, 'காலிஸ்தான் ஆதரவு ஓட்டெடுப்பு' நிகழ்வில், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், நம் தேசிய கொடியை அவமதித்த நிகழ்வும் நடந்தது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, 'காலிஸ்தான்' என்ற தனி நாடு உருவாக்க வேண்டும் என, காலிஸ்தான் தீவிரவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்தபடி, இந்தியாவில் பல நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காலிஸ்தான் தனிநாடு உருவாக்குவதை ஆதரிக்கிறீர்களா என்பது குறித்து, கனடா தலைநகர் ஒட்டாவாவில், அதிகாரப்பூர்வ ஓட்டெடுப்பை, எஸ்.எப்.ஜே., எனும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு நடத்தியது. இந்த அமைப்பு, சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பு. இந்த ஓட்டெடுப்பு முடிவடைந்தபோது, அங்கிருந்த சிலர், நம் தேசிய கொடியை அவமதித்த காணொளிகள் மற்றும் செய்தி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து, 'கொலை செய்' என்ற கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் முன்னிலையில் இக்கோஷங்கள் மற்றும் கொடி அவமதிப்பு நிகழ்ந்த போதிலும், அவர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடந்த ஓட்டெடுப்பில், 53,000க்கும் மேற்பட்ட கனடா சீக்கியர்கள் பங்கேற்றதாக எஸ்.எப்.ஜே., தெரிவித்துள்ளது. ஓட்டெடுப்பின் போது, இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட எஸ்.எப்.ஜே.,வின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னுன், ஓட்டளித்தவர்கள் முன் வீடியோவில் தோன்றி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை