உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் இன்று (ஜன-30) மீட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் இந்திய படையினரின் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாக போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.வளைகுடா மற்றும் கிழக்கு சோமாலியா பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் கடற் படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றினர்.இன்று சோமாலிய கடற்பகுதி அருகே பாகிஸ்தானை சேர்ந்த அல்நயீமீ என்ற மீன்பிடி கப்பலை வழிமறித்து கொள்ளையடிக்கவும் கப்பலில் இருந்தவர்களை கடத்தவும் முயன்றனர். இத்தகவல் இந்திய கடற்பைடையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் விரைந்து கடற்கொள்ளையர்கள் 11 பேரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த மாலுமி, மீனவர்கள், மற்றும் ஊழியர்கள் 19 பேரை இந்திய படையினர் மீட்டனர். இத்தகவலை நமது படையினர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mohan das GANDHI
ஜன 31, 2024 02:01

பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க நம் பாரத பிரதமரிடம் பாகிஸ்தான் படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் கெஞ்சி கேட்கின்றார்கள் காரணம் பாகிஸ்தான் ஒரு SECT நாடு அங்கு 1110 தீவிரவாத குரூப்புகள் உள்ளன இதனால் நாடு முன்னேறாமல் பொருளாதாரத்திலும், உணவுப்பஞ்சம் வெளிநாட்டு பார்வையாளர்கள் TOURISTS வரவும் இல்லை என்பதால் நாடும் மிக மிக ஏழ்மயில் உள்ளது தினமும் பலதரப்பட்ட ஜாதி கலவர இஸ்லாமிகள் அவரவர்க்குள் அடித்து குண்டு போட்டு சாகிறார்கள் பாகிஸ்தானில் என்பதே ? ஆகவே இனி இந்தியா தான் பாகிஸ்தானை மீட்டு மீண்டும் இந்தியாவுடன் 1946 போல இணைக்க வேண்டும்


வீரா
ஜன 31, 2024 01:47

கடத்தியவனும் கடத்தப்பட்டவன் ரெண்டு பேருமே மூர்கனுங்க. கிராஸ் fire ல நம்ம ஆளுங்க மாட்ட கூடாது. கொஞ்ச நாளைக்கு முன் இலங்கையர்கள் மீன் பிடிக்க சென்று இதே மாதிரி சோமாலியா கடலில் மாட்டிக்கொண்டு இந்திய படையால் காப்பாற்ற பட்டனர். தமிழர்கள் கச்சதீவில் மீன் பிடிப்பது தவறு என்றால் இலங்கைகாரன் எதற்கு சோமாலியாவில் மீன் பிடிக்கனும்?


RAMAKRISHNAN NATESAN
ஜன 30, 2024 14:38

சில வருடங்களாகவே நம்மை சர்ச்சையில் இழுத்த துருக்கி மலேசியா உடன் உள்ளூர் இஸ்லாமியர்களை இணைத்தது எது ?? மதம்தானே ??


Velan Iyengaar
ஜன 30, 2024 14:24

IMO நெறிமுறைப்படி தான் ஒவ்வொரு நாடும் கடலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்...கடலில் ஆபத்துக்கு உதவ ஒவ்வொரு நாடும் எப்போதும் இன... மொழி ....மத ....பாகுபாடின்றி உதவ வேண்டும் என்பதை உலகின் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டுள்ளது....இந்தியா அதன்படி நடந்துள்ளளது... வேறு எந்த நாடும் அந்த நாட்டின் கடல் பரப்புக்கு அருகே நடக்கும் அல்லது ரோந்து செல்லும் இடத்துக்கு அருகே ஏற்படும் இடர்களை கலையவே முற்படவேண்டும்... முற்படும் கூட....என்ன பிற நாடுகள் இதுபோன்ற செய்லகளை செய்தால் அதற்க்கு தனிப்பட்ட விதத்தில் பெரிதாக விளம்பரம் செய்யமாட்டார்கள்..அதை கடமையாக பார்ப்பார்கள்......


ஸ்ரீ ராஜ்
ஜன 30, 2024 19:19

"சீனா" மிக தூரத்தில் உள்ளதால் காப்பாற்ற வரவில்லை, எனவே இது ஒன்றும் இந்தியா பெருமைப்படும் விஷயமில்லை.. சரிங்களா ஐயர்வாள்


விவசாயி
ஜன 30, 2024 13:52

நம் கடற்படைக்கு வாழ்த்துகள்


பாரதி
ஜன 30, 2024 13:31

பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்கள் மோடியால்தான் பாகிஸ்தான் நாடே காப்பாற்றப்பட முடியும் என்று...


vnatarajan
ஜன 30, 2024 12:04

மிகவும் பாராட்டவேண்டிய செயல். மேலும் தொடரட்டும்


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜன 30, 2024 11:04

பாரதம் உலகின் ஆபத்பாந்தவன்


Velan Iyengaar
ஜன 30, 2024 10:55

பாராட்டுக்குரிய செயல்.


ஆராவமுதன்,சின்னசேலம்
ஜன 30, 2024 12:14

உன்னோட டொப்பிள் கொடி பங்காளிகளை காப்பாற்றியதற்குத்தானே இந்த பாராட்டு.


Duruvesan
ஜன 30, 2024 12:39

அதுக்கு தான் ஆரா


Velan Iyengaar
ஜன 30, 2024 13:54

எல்லாம் தெரிஞ்ச அறிவாளிங்க என்று இந்த ரெண்டு சங்கிகேணயங்களுக்கும் நினைப்புஹா ஹா ஹா ஹா... இவனுங்களுக்கு bj கட்சிக்கு எதிர் நிலை எடுத்தா அவர்கள் எல்லாமே மாற்று மதத்தினர் என்று நினைப்பு... தமிழகத்தில் bj கட்சி ஒத்த வோட்டு வாங்கிய வார்டில் ஒரே ஒரு ஹிந்து தான் இருந்தாரா??


அசோகன்
ஜன 30, 2024 10:51

பாக்கிஸ்தானுக்கும் இங்கே உள்ள அதன் அடிவருடிகளுக்கும்... என்ன நன்றி என்பது சுத்தமாக கிடையாது... இதே 19 பேரை பயங்கரவாதிகளாக இந்தியாவுக்குள் அனுப்பி குண்டு வைக்காமல் இருந்தால் சரி


Velan Iyengaar
ஜன 30, 2024 11:30

உயரிய மனிதாபிமானத்துக்கும் சங்கித்தணத்துக்கும் வித்தியாசம் தெரியாத கொடூர கோஷ்டி இது


RAMESH
ஜன 30, 2024 11:53

சங்கிகள் மனிதாபிமானத்துடன் இருப்பதால் தான் நீ சமத்துவம் பற்றி நமது பாரத தேசத்தில் பேச முடிகிறது. நீ அரபு நாடுகளிலும், ஐரோப்பிய ஆபிரிக்க பிரதேசங்களிலும் சமத்துவத்தை பின்பற்ற சொல்லமுடியுமா, உன்னால் பேசவாவது முடியுமா. உன் பதிவுகள் எல்லாமே திமிறின் உச்சக்கட்டம்


RAMESH
ஜன 30, 2024 11:58

நன்றி கெட்ட பாகிஸ்தானியர்கள். இந்த செய்தியை கேள்விப்பட்டாவது பாகிஸ்தான் அரசு நமது தேசத்தை பாராட்டுமா, இனிமேல் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் இயக்காமல் இருக்குமா. இந்திய கப்பற்படை காப்பாற்றிய இந்த 19 பாகிஸ்தானியர்களையே தீவிரவாதிகளாக நமது நாட்டிற்குள் அனுப்பவும் பாகிஸ்தான் அரசு தயங்காது. அவ்வளவு வன்மம் அவர்களுக்கு நமது நாட்டின் மேல் .


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை